*மீலாது விழா தொடர்பான ஃபத்வா - தமிழாக்கம்*
*தாருல் உலூம் தேவ் பந்த் மதரஸா பத்வா குழு:*
நாள் : 2- முஹர்ரம் - 1426 ஹிஜ்ரி
பத்வா கொடுத்தவர் : ஹசன் மஹ்மூத்
கேள்வி :- *ரபியுல் அவ்வல் மாதத்தில் குறிப்பாக பிறை 12 இல் மௌலூது ஓதுவது அந்நாட்களில் குறிப்பிட்ட கவிதை வரிகளை படிப்பது அனுமதிகபட்டதா? இல்லை அனுமதிக்கபடாததா? என்பதை தெளிவுபடுதவும்?*
பதில் : - அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது மீது சலாம் உண்டாவதாக.
நபி(ஸல்) அவர்களை பற்றி நினைவு கூறுவது, வணக்கங்களாகிய தொழுகை,நோன்பு,ஹஜ்,ஜிஹாத் போன்ற காரியங்களாக இருந்தாலும் சரியே! நடவடிகைகளாக்கிய தூங்குவது,நடப்பது,எழுவது,அமர்வது ஆகியவைகளாகிய இருந்தாலும் சரியே!
நபி(ஸல்) அவர்களின் ஆடைகளை பற்றி குறிப்பதாக இருந்தாலும் சரியே! நபி(ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் குழந்தை பருவத்தை குறிப்பிடுவதாக இருந்தாலும் சரியே! ஆக இதுபோன்ற அனைத்து காரியங்களிலும் அவர்களை நினைவு கூறுவதின் மூலம் அறிவுறையையும்,படிப்பினையையும் பெறுவது நமக்கு நன்மையையும்,பரக்கத்தையும் தருவது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
இதுபோன்ற விசியங்களில் ஆதாரமற்ற தகவல்களையும்,செய்திகளையும் மற்றும் குறிப்பிட்ட வழிமுறைகளையும் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் மீலாது விழா நடத்துவது இதற்க்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. மேலும் இது கெட்ட பித்தத்(بدعة سيئة) ஆகும். இந்த மீலாத் விழா மற்றும் மௌலூத் ஓதுவது குரான்,ஹதீஸில் இல்லாத ஒன்றாகும்.
மேலும் சஹாபாக்கள்,தாபயின்கள், தபஉதாபயின்கள் ஆகியவரிடமிருந்தும் எவ்வித ஆதாரமும் கிடைக்கா பெறவில்லை.
ஹிஜ்ரி 600 ஆண்டு வரை இந்த உம்மத்தில் மீலாத் என்கிற ஒரு நிகழ்வே இல்லாத நிலையில் இருந்தது. இது 600 ஆண்டுகளுக்கு பிறகுதான் இது வந்தது/ இது ஆரம்பமாகும் போது இதை எதிர்பதற்காக அல்லாமா இப்னு அமீர் அல் ஹஜ் மக்கி(ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்-மத்கள் என்ற நூலில் விரிவான ஆதாரங்களை கொண்டு இந்த மீலாத்தை அவர்கள் மறுப்பு அளித்தார்கள். இன்று வரையிலும் சத்தியத்தில் உள்ள அறிஞர் பெரும்மக்கள் இந்த மீலாத்தை எதிர்த்து கொண்டே தான் வருகின்றனர்.
தமிழில் மொழிபெயர்ப்பு : *மௌலவி ஹசன் அலி உமரி*
Hasan Ali Umari
No comments:
Post a Comment