பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 14

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 14 ]*

*☄பாங்கிற்குப் பதில்*
         *சொல்வதன்*
                *சிறப்புக்கள் { 01 }*

*🏮🍂தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக நபியவர்கள் வழிகாட்டிய ஒரு அற்புத நடைமுறை தான் பாங்கு சொல்லுதல். ஒருவர் முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்கும் போது அந்த பாங்குகிற்குப் பதில் கூறுவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருகிறது.*

*🏮🍂இன்றைக்கு பெரும்பாலான சகோதரர்கள் பாங்கு சொல்லும் போது அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. ஒரு மார்க்க மீட்டிங் நடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதில் சொல்வதற்காக இடைவெளி விடப்படுகிறது.* ஆனால் அந்நேரத்தில் பாங்கிற்குப் பதில் சொல்லாமல் பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இவை தவிர்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.

*பாங்கிற்கு நாம் பதில் கூறுவது நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பெரும் பாக்கியமாகும்.*

*عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ  اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِذَا قَالَ الْمُؤَذِّنُ  اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ‏.‏ فَقَالَ أَحَدُكُمُ اللَّهُ  أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ‏.‏ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ  إِلاَّ اللَّهُ ‏.‏ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ثُمَّ  قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏.‏ قَالَ أَشْهَدُ أَنَّ  مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏.‏ ثُمَّ قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ ‏.‏  قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ ثُمَّ قَالَ حَىَّ  عَلَى الْفَلاَحِ ‏.‏ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏  ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ‏.‏ قَالَ اللَّهُ  أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ‏.‏ ثُمَّ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏.‏  قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏.‏ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ ‏"*

_*🍃அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளர் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் நீங்களும் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள். பின்பு அவர், "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர், "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொன்னால் நீங்கள் "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் "ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று சொன்னால் நீங்கள், "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் நீங்களும் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.*_

*🎙அறிவிப்பவர்:*
          *உமர் பின் அல்கத்தாப் (ரலி),*

*📚 நூல் முஸ்லிம் (629) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment