பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 6, 2019

நன்மைகளை - 45

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 45 ]*_

*🍃தொழுகையின்*
           *ஆரம்ப துஆக்கள் [ 01 ]🍃*

*🏮🍂தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் ஓதப்படும் துஆக்களாகும்.*

*🏮🍂நாம் அல்லாஹ்விடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்பதை அறியாத மக்களாகவே இருக்கின்றோம்.*

*🏮🍂நாம் எவற்றையெல்லாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.*

*தொழுகை என்பதற்கு அரபியில் "ஸலாத்'' என்று கூறுவார்கள். இதன் பொருள் "பிரார்த்தனை'' என்பதாகும்.*

*🏮🍂தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கின்றவரை பல்வேறு நிலைகளில் ஓதும் துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.*

*ஒவ்வொரு துஆவும் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய துஆக்களாகும்.*

*🏮🍂இறை அனைத்தும் பாவங்களிலிருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி, நேர்வழியில் நம்மை நிலைநிறுத்தி, இவ்வுலக வாழ்வில் ஈடேற்றமளித்து, ஈமானோடு நம்மை மரணிக்கச் செய்து, கொடும் நரகத்திலிருந்து காப்பாற்றி, நிரந்தர சுவர்க்கத்தில் நம்மை இணைத்திடும் அற்புத கருத்துக்களைப் பொதிந்துள்ள துஆக்கள். இறைவனால் இறைத்தூதருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அற்புத துஆக்கள்.*

*இந்த அற்புத துஆக்களை ஓதும் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்கிறார்கள்.*

*🏮🍂என்றாவது ஒருநாள் நாம் துஆக்கள் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியைப் பெற்று, இந்த துஆக்களை ஓதும் போது இறையருளால் மிகப்பெரும் பாக்கியத்திற்குரிய மனிதர்களாகிவிடுவோம். இது தொழுகையாளிகளுக்கு இறைவனின் மாபெரும் அருளாகும்.*

*தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும் காண்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🍃அல்லாஹும்ம பாஇத் பைனீ🍃*

_*ﺃﻗﻮﻝ: اﻟﻠﻬﻢ ﺑﺎﻋﺪ ﺑﻴﻨﻲ ﻭﺑﻴﻦ ﺧﻄﺎﻳﺎﻱ، ﻛﻤﺎ ﺑﺎﻋﺪﺕ ﺑﻴﻦ اﻟﻤﺸﺮﻕ ﻭاﻟﻤﻐﺮﺏ، اﻟﻠﻬﻢ ﻧﻘﻨﻲ ﻣﻦ اﻟﺨﻄﺎﻳﺎ ﻛﻤﺎ ﻳﻨﻘﻰ اﻟﺜﻮﺏ اﻷﺑﻴﺾ ﻣﻦ اﻟﺪﻧﺲ، اﻟﻠﻬﻢ اﻏﺴﻞ ﺧﻄﺎﻳﺎﻱ ﺑﺎﻟﻤﺎء ﻭاﻟﺜﻠﺞ ﻭاﻟﺒﺮﺩ "*_

_*🍃அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்*_

*🎙அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*📚நூல்: புகாரி (744)📚*

_*🍃(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)*_

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment