பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 41

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 41 ]*

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 11 }*

*☄முதல் வரிசையின்*
            *சிறப்புகளும்,*
                     *நன்மைகளும் [ 03 ]*

*☄வரிசையில் பிந்தியவர்கள்*
  *மறுமையிலும் பிந்தியவர்களே!*

*🏮🍂தொழுகையாளிகள் அனைவருக்கும் மறுமையில் சிறந்த பரிசு இருக்கிறது. அதே நேரத்தில் பள்ளிக்கு முன்கூட்டியே வரும் சிலர் வரிசையில் வேண்டுமென்றே பிற்பகுதிக்குச் செல்வார்கள். இவ்வாறு முன்கூட்டியே வருபவர்கள் பின்வரிசையை நாடிச் செல்வது மறுமையில் நம்மை பிந்தச் செய்யக்கூடியதாகும்.*

حَدَّثَنَا  شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ أَبِي  نَضْرَةَ الْعَبْدِيِّ، _*عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ  اللَّهِ صلى الله عليه وسلم رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا فَقَالَ  لَهُمْ ‏"‏ تَقَدَّمُوا فَائْتَمُّوا بِي  وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ لاَ يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ  حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ ‏"*_

_*🍃அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது "முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (மறுமையில்) பின்தங்கச் செய்துவிடுவான்'' என்று கூறினார்கள்.*_

*📚நூல்: முஸ்லிம் (747)📚*

*மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.*

_*🍃அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலர் பள்ளிவாசலின் பிற்பகுதியில் (நிற்பதைக்) கண்டார்கள்...'' என்று ஹதீஸ் தொடங்குகிறது.*_

*📚நூல்: முஸ்லிம் (747)📚*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، ﺣﺪﺛﻨﺎ ﻋﻜﺮﻣﺔ ﺑﻦ ﻋﻤﺎﺭ، ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻛﺜﻴﺮ، ﻋﻦ ﻫﻼﻝ ﺑﻦ ﻋﻴﺎﺽ، _*ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻮ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﻻ ﻳﺨﺮﺝ اﻟﺮﺟﻼﻥ ﻳﻀﺮﺑﺎﻥ اﻟﻐﺎﺋﻂ ﻛﺎﺷﻔﺎﻥ ﻋﻮﺭﺗﻬﻤﺎ ﻳﺘﺤﺪﺛﺎﻥ، ﻓﺈﻥ اﻟﻠﻪ ﻳﻤﻘﺖ ﻋﻠﻰ ﺫﻟﻚ*_

_*🍃அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களிடத்தில் (வரிசையில்) பின்தங்குவதைக்  கண்டார்கள். அவர்களை நோக்கி ''முந்தி வாருங்கள்! என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். ஒரு கூட்டம் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தால் அல்லாஹ் அவர்களை மறுமையில் பிந்தச் செய்து விடுவான்'' என்று கூறினார்கள்.*_

*📚நூற்கள்  அஹ்மத் (11310)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄வேண்டுமென்றே*
         *பின்வரிசையை நாடினால்...*

ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺯاﻕ، ﻋﻦ ﻋﻜﺮﻣﺔ ﺑﻦ ﻋﻤﺎﺭ، ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻛﺜﻴﺮ، ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻠﻤﺔ، _*ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﻳﺰاﻝ ﻗﻮﻡ ﻳﺘﺄﺧﺮﻭﻥ ﻋﻦ اﻟﺼﻒ اﻷﻭﻝ ﺣﺘﻰ ﻳﺆﺧﺮﻫﻢ اﻟﻠﻪ ﻓﻲ اﻟﻨﺎﺭ*_

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

_*🍃ஒரு கூட்டத்தார் (வேண்டுமென்றே) முன் வரிசையிலிருந்து பின்தங்கிக் கொண்டேயிருந்தால் இறுதியாக அல்லாஹ் அவர்களை நரகத்தில் பின்தங்கச் செய்துவிடுவான்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *ஆயிஷா (ரலி)*

*📚நூல்: அபூதாவூத் ( 679)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment