பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 24

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 24 ]*

*☄தொழுகைக்காக*
            *நடந்து செல்வதன்*
                          *சிறப்புகள் { 03 }*

*☄எடுத்து வைக்கும்*
           *ஒவ்வொரு எட்டும்*
                      *தர்மமாகும்☄*

ﺣﺪﺛﻨﻲ ﺇﺳﺤﺎﻕ ﺑﻦ ﻧﺼﺮ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺯاﻕ، ﻋﻦ ﻣﻌﻤﺮ، ﻋﻦ ﻫﻤﺎﻡ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: «ﻛﻞ ﺳﻼﻣﻰ ﻋﻠﻴﻪ ﺻﺪﻗﺔ، ﻛﻞ ﻳﻮﻡ، ﻳﻌﻴﻦ اﻟﺮﺟﻞ ﻓﻲ ﺩاﺑﺘﻪ، ﻳﺤﺎﻣﻠﻪ ﻋﻠﻴﻬﺎ، ﺃﻭ ﻳﺮﻓﻊ ﻋﻠﻴﻬﺎ ﻣﺘﺎﻋﻪ ﺻﺪﻗﺔ، ﻭاﻟﻜﻠﻤﺔ اﻟﻄﻴﺒﺔ، ﻭﻛﻞ ﺧﻄﻮﺓ ﻳﻤﺸﻴﻬﺎ ﺇﻟﻰ اﻟﺼﻼﺓ ﺻﺪﻗﺔ، ﻭﺩﻝ اﻟﻄﺮﻳﻖ ﺻﺪﻗﺔ*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பதும் தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *அபூஹுரைரா (ரலி),*

*📚நூல்: புகாரி (2891)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பாவங்கள் அழிக்கப்பட்டு,*
  *தகுதிகள் உயர்த்தப்படுதல்*

حَدَّثَنِي  إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ،  أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - عَنْ زَيْدِ بْنِ  أَبِي أُنَيْسَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ  الأَشْجَعِيِّ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى  الله عليه وسلم ‏"‏ مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ  ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ  فَرَائِضِ اللَّهِ كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً  وَالأُخْرَى تَرْفَعُ دَرَجَةً ‏"*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.*_

*🎙அறிவிப்பவர்:*
               *அபூஹுரைரா (ரலி),*

*📚நூல்: முஸ்லிம் (1184)📚*

حَدَّثَنَا يَحْيَى بْنُ  أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ  جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - أَخْبَرَنِي  الْعَلاَءُ، عَنْ أَبِيهِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ ‏"‏ أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ  بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى يَا  رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ  وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ  الصَّلاَةِ فَذَلِكُمُ الرِّبَاطُ ‏"‏*

_*🍃அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள்.*_

*📚(நூல்: முஸ்லிம் 421)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment