பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 17

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 17 ]*

*☄தொழுகைக்கு முன்கூட்டியே*
        *வருவதன் சிறப்புகள் { 01 }*

*🏮🍂ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.* பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். *இகாமத் சொன்னவுடன் வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க தொழுகைக்கு ஓடிவருவார்கள்.*

*🏮🍂அதுமட்டுமில்லாமல் சில சகோதரர்கள் இகாமத் சொல்லப்பட்ட பிறகு தான் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றச் செல்வார்கள். அவர்கள் தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, பிறகு உளூச் செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்துவிடும்.* அல்லது இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது தொழுகையில் வந்து இணைவார்கள்.*

*🏮🍂இது போன்ற வீணாண காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.*

*🏮🍂தொழுகைக்கு முன்கூட்டியே நாம் தயாராவதால் ஏராளமான நன்மைகளை நாம் அடைகின்றோம். இது அல்லாஹ் நமக்குச் செய்த பாக்கியமாகும்.*

*🏮🍂தொழுகைக்கு நாம் முன்கூட்டியே வருவதால் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄நபியவர்களின் முன்மாதிரி☄*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் தங்களுடைய வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, தொழுகைக்காக பள்ளியை நோக்கி விரைந்து விடுவார்கள்.*

5363 - ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺮﻋﺮﺓ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ اﻟﺤﻜﻢ ﺑﻦ ﻋﺘﻴﺒﺔ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، *ﻋﻦ اﻷﺳﻮﺩ ﺑﻦ ﻳﺰﻳﺪ، ﺳﺄﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﻣﺎ ﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳﺼﻨﻊ ﻓﻲ اﻟﺒﻴﺖ؟ ﻗﺎﻟﺖ: «ﻛﺎﻥ ﻳﻜﻮﻥ ﻓﻲ ﻣﻬﻨﺔ ﺃﻫﻠﻪ، ﻓﺈﺫا ﺳﻤﻊ اﻷﺫاﻥ ﺧﺮﺝ*

_*🍃அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்❓'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.*_

*📚 (நூல்: புகாரி 5363) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄முந்தி வருவதே*
                *மிகச் சிறந்தது☄*

*🏮🍂தொழுகைக்கு நாம் முன்கூட்டியே தயாராவதால் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ் நம்முடைய கண்களுக்குக் காட்டவில்லை. அவ்வாறு காட்டினால் அதனை அடைவதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடக்கூடிய நிலை உருவாகிவிடும்.*

615 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺳﻤﻲ ﻣﻮﻟﻰ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻋﻦ ﺃﺑﻲ ﺻﺎﻟﺢ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻟﻮ ﻳﻌﻠﻢ اﻟﻨﺎﺱ ﻣﺎ ﻓﻲ اﻟﻨﺪاء ﻭاﻟﺼﻒ اﻷﻭﻝ، ﺛﻢ ﻟﻢ ﻳﺠﺪﻭا ﺇﻻ ﺃﻥ ﻳﺴﺘﻬﻤﻮا ﻋﻠﻴﻪ ﻻﺳﺘﻬﻤﻮا، ﻭﻟﻮ ﻳﻌﻠﻤﻮﻥ ﻣﺎ ﻓﻲ اﻟﺘﻬﺠﻴﺮ ﻻﺳﺘﺒﻘﻮا ﺇﻟﻴﻪ، ﻭﻟﻮ ﻳﻌﻠﻤﻮﻥ ﻣﺎ ﻓﻲ اﻟﻌﺘﻤﺔ ﻭاﻟﺼﺒﺢ، ﻷﺗﻮﻫﻤﺎ ﻭﻟﻮ ﺣﺒﻮا*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்:  புகாரி (615) 📚*

*🏮🍂இப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை தொழுகையாளிகள் தான் பெறமுடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தொழுகையைப் பேணாதவர்கள் ஒருபோதும் இது போன்ற நற்பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியாது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment