*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*✍🏼...நன்மைகளை வாரி*
⤵
*வழங்கும் தொழுகை*
*✍🏼...தொடர் [ 37 ]*
*☄ஜமாஅத்தாகத்*
*தொழுவதன்*
*சிறப்புகள் { 08 }*
*🏮🍂நாம் ஜமாஅத்தாகத் தொழும் போது வரிசையாக நின்று தொழும் பாக்கியத்தைப் பெறுகின்றோம். இவ்வாறு வரிசையாக நின்று தொழுவது நமக்குப் பல நன்மைகளைப் பெற்றுத் தருகிறது. தொழுகையை ஜமாஅத்துடன் பேணித் தொழுபவர்கள் இந்த நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். நாம் வரிசையாக நின்று தொழுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் காண்போம்.*
*🏖தொழுகைக்காக அணிவகுத்து*
*நிற்பதின் சிறப்புகள்🏖*
*🏖வானவர்களைப் போன்ற*
*அணிவகுப்பு🏖*
*🏮🍂நாம் ஜமாஅத்துடன் கடமையான தொழுகைகளை நிறைவேற்றும் போது இறைவனுக்கு முன்னால் மலக்குமார்கள் அணிவகுத்து நிற்பதைப் போன்று அணிவகுக்கின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம். நாம் இறைவனுக்கு முன்னால் பணிவுடன் அணிவகுத்து நிற்பதன் மூலம் அல்லாஹ் தனது அருட்கொடைகளை நமக்கு வாரி வழங்குகின்றான்.*
*عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ اسْكُنُوا فِي الصَّلاَةِ " . قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَرَآنَا حَلَقًا فَقَالَ " مَا لِي أَرَاكُمْ عِزِينَ " . قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ " أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا " . فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ " يُتِمُّونَ الصُّفُوفَ الأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ "*
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப் போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்❓'' என்று கேட்டோம். அதற்கு "வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள்'' என்று பதிலளித்தார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஜாபிர் பின் சமுரா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் (736)📚*
*🏮🍂முதல் வரிசையைப் பூர்த்தி செய்த பிறகு இரண்டாவது வரிசையை ஆரம்பம் செய்தால்தான் மலக்குமார்களுக்கு ஒப்பாக நாம் அணிவகுத்து நிற்க முடியும்.*
*இன்றைக்குப் பல பள்ளிகளில் வரிசைகளில் நிற்கும் ஒழுங்கினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. ஒருவர் மற்றொருவருக்கு மத்தியில் மிகவும் இடைவெளி விட்டு நிற்பது, மேலும் முதல் வரிசையில் இடம் இருக்கும் பொழுதே இரண்டாம் வரிசையை ஆரம்பம் செய்வது போன்ற நடைமுறைகள் சர்வ சாதரணமாகக் காணப்படுகிறது. இது போன்ற ஒழுங்கீனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நபியவர்கள் கூறியதைப் போன்று முதல் வரிசையைப் பூர்த்தி செய்த பின் இரண்டாவது வரிசை ஆரம்பம் செய்தால் தான் நாம் முழுமையான நன்மைகளை அடைய முடியும்.*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*🏖வரிசைகளில்*
*இடைவெளி கூடாது🏖*
*🏮🍂வரிசைகளில் இடைவெளி விட்டு தனித்தனியாக நிற்பதை நபியவர்கள் மிகவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.*
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் (ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னு அப்பாஸ் (ரலி)*
*📚நூல்: அல் முஃஜமுல் கபீர் (11289 பாகம் : 9 பக்கம் ; 390)📚*
*📚மஜ்மவுஸ் ஸவாயித் (2505 பாகம் : 2 பக்கம் : 109)📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment