பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 21

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 21 ]*

*☄தொழுகைக்காகக்*
               *காத்திருப்பதன்*
                       *சிறப்புகள் { 02 }*

*☄மலக்குமார்களின்*
               *பிரார்த்தனை☄*

659 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻠﻤﺔ، ﻋﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺰﻧﺎﺩ، ﻋﻦ اﻷﻋﺮﺝ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " اﻟﻤﻼﺋﻜﺔ ﺗﺼﻠﻲ ﻋﻠﻰ ﺃﺣﺪﻛﻢ ﻣﺎ ﺩاﻡ ﻓﻲ ﻣﺼﻼﻩ، ﻣﺎ ﻟﻢ ﻳﺤﺪﺙ: اﻟﻠﻬﻢ اﻏﻔﺮ ﻟﻪ، اﻟﻠﻬﻢ اﺭﺣﻤﻪ، ﻻ ﻳﺰاﻝ ﺃﺣﺪﻛﻢ ﻓﻲ ﺻﻼﺓ ﻣﺎ ﺩاﻣﺖ اﻟﺼﻼﺓ ﺗﺤﺒﺴﻪ -[133]-، ﻻ ﻳﻤﻨﻌﻪ ﺃﻥ ﻳﻨﻘﻠﺐ ﺇﻟﻰ ﺃﻫﻠﻪ ﺇﻻ اﻟﺼﻼﺓ "*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர்பார்த்து) இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சிறுதுடக்கு ஏற்படாதவரை (பிராத்திக்கிறார்கள்). இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணைபுரிவாயாக! என்று கூறுகின்றனர்.*_

_*🍃தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: புகாரி (659) 📚*

*🏮🍂மலக்குமார்கள் பாவமே அறியாதவர்கள். அவர்களின் பிரார்த்தனை கண்டிப்பாக அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். தொழுகையாளிகள் தான் இத்தகைய பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியும்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பாவங்கள் அழிக்கப்பட்டு,* *அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்*

*🎙அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:*

حَدَّثَنَا يَحْيَى بْنُ  أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ  جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - أَخْبَرَنِي  الْعَلاَءُ، عَنْ أَبِيهِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ ‏"‏ أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ  بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى يَا  رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ  وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ  الصَّلاَةِ فَذَلِكُمُ الرِّبَاطُ ‏"‏*

_*🍃 (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா❓'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள்.*_

*📚(நூல்: முஸ்லிம் 421)📚*

*🏮🍂நேற்றும், இன்றும், கண்ட  நபிமொழிகளிலிருந்து தொழுகைக்காக நாம் காத்திருப்பதால் கிடைக்கும் பயன்களை வரிசையாகக் காண்போம்.*

*☄ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அவர் தூங்கிவிட்டாலும் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.*

*☄ஒருவர் தொழுது விட்டு அதே இடத்தில் மற்றொரு தொழுகையை எதிர்பார்த்து காத்திருந்தால் அவரது உளூ நீங்காத வரை அல்லது அவர் அந்த இடத்தை விட்டு நகரும் வரை மலக்குமார்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்; பாவமன்னிப்புக் கோருகிறார்கள்.*

*☄தொழுகைக்காகக் காத்திருப்பது நம்முடைய பாவங்களை அழித்து நன்மைகளை உயர்த்தும் நல்லறமாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment