பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?

 

பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?  விளக்கவும்.
எம். அரஃபாத்துந் நிஸா, கொடிக்கால் பாளையம்

அந்நிய ஆண்களுக்கு முன்னால் முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. பாங்குக்காகவோ அல்லது உளூ, குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களுக்காகவோ பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராத நடைமுறைகள், நிபந்தனைகள் நமது சமுதாயத்தில் குறிப்பாக தமிழக முஸ்லிம்களிடம் வேரூன்றிப் போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று!

எந்த அளவுக்கென்றால் அந்நிய ஆண்களுக்கு முன்னால் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் சர்வ சாதாரணமாகக் காட்சி தரும் பெண்கள் கூட பாங்கு சொல்லும் போது தலையில் மட்டும் துணியைப் போட்டுக் கொள்கின்றனர்.

சில இடங்களில் பாங்கு சொல்லப்படும் போது பெண்கள் சிறிய துண்டுப் பேப்பர் அல்லது வேறு ஏதேனும் குச்சியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கின்றனர். மார்க்கத்தைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம்.

No comments:

Post a Comment