பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா?

 

? மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?

சுபைதா பீவி, தோப்புத்துறை

பொதுவாக மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் யாருக்கும் விருந்தளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மார்க்கத்திற்கு முரணில்லாத விருந்துகளில் கலந்து கொள்வதிலும் தவறில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்த போது உம்மு சுலைம் என்ற பெண்மணி விருந்தளித்ததாகவும் அதில் பல நபித்தோழர்கள் கலந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். தமது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸ் எனும் உணவைத் தயாரித்து அதை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனது தாய் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். “எங்களிடமிருந்து உங்களுக்குரிய சிறிய அன்பளிப்பு‘ என்று கூறுமாறு சொன்னாôர்கள்” என்று கூறினேன். “அதை அங்கு வை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிசில பெயர்களைக் குறிப்பிட்டு, “இன்னின்ன ஆட்களையும் நீ யாரையெல்லாம் அறிந்திருக்கிறாயோ அவர்களையும் அழைத்து வா” என்று கூறினார்கள். நான் சந்தித்த ஆட்களையும்நபி (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறிய நபர்களையும் நான் அழைத்தேன்.

(இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்களிடம்) “அவர்கள் எத்தனை பேர்?” என்று அபூ உஸ்மான் கேட்டார். “முன்னூறு பேர்” என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல்: நஸயீ 3334

No comments:

Post a Comment