பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

சாத்தானின் வசனங்கள்


சாத்தானின் வசனங்கள்
  1998 நவம்பர் மாத அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம் - திருத்தங்களுடன்
ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள் தன் பிள்ளை அடிமுட்டாளாகவும், அகோரமாகவும் இருந்து முதல் தாராத்துப் பிள்ளை அதிபுத்திசாலியாகவும் அழகாகவும் இருந்து விட்டால் அந்தப் பிள்ளை  மேல் பொறாமைப் படுவதையும் , அந்தப் பிள்ளையின் புத்திசாலித்தனமான குறும்புகள் கூட அவளை ஆத்திரப்படுத்துவதையும் நாம் காணலாம். அவளது பொறாமைக்கும், ஆத்திரத்துக்கும் காரணம் தன்பிள்ளை புத்திசாலியாக இல்லையே என்ற விரக்தி மனப்பான்மை தவிர வேறில்லை.
பக்கத்து வீட்டுப் பையன் எல்லாப் பாடங்களிலும் முதன்மையாகத் திகழும் போது தான் மட்டும் ஸைபராக இருக்கும் மாணவனிடமும் இதே மனப்பான்மையை நாம் காணலாம். புத்திசாலிப் பையன் மேல் பொறாமைப்படுவதும், அவனைப் பற்றி இல்லாதவைகளைக் கூறி கோள் மூட்டுவதும் இந்த மனப்பான்மை கொண்டோரின் இயல்பு. தன்னிடம் இல்லாத தகுதி அவனிடம் இருக்கின்றதே என்று ஏற்பட்ட விரக்தியை இப்படித் தான் இவன் வெளிப்படுத்த முடியும்.
மாற்றாந்தாயிடமும், மண்ணாங்கட்டி மாணவனிடமும் தான் இந்த மனப்பான்மை  இருக்கும் என்று சொல்ல முடியாது . இந்தியாவில் இப்படிப்பட்ட பிரகஸ்பதிகள் சமீப காலமாக அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
தான் சார்ந்திருக்கின்ற மதம் எவ்வித அடிப்படையுமின்றி இருப்பதையும், ,ஆபாசங்கள் ,மூட நம்பிக்கைகள்  தன் மதத்தில் மலிந்திருப்பதையும்
ஆணுடன் ஆண் புணர்ந்த கதை,
பெண்கள் குளிக்கும் போது அவர்களின் ஆடைகளை ஒளித்து வைத்து நடத்திய லீலைகள்,
ஆணுறுப்பை வணங்கும் அளவுக்கு இறைக் கொள்கை.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஜாதி வேறுபாடு,
உடன்கட்டை
இன்னபிற அம்சங்கள் நிறைந்திருப்பதைக் காணும் சிலருக்கு. இவையெல்லாம் இல்லாத மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிட்டு எக்காலத்துக்கும் பொருந்துகின்ற தீர்வைத் தருகின்ற இஸ்லாத்தைக் கண்டால் சும்மா இருக்க முடிவதில்லை. தங்கள் மீதே ஆத்திரப்பட வேண்டிய இவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் ஆத்திரத்தைத் திருப்பி விட்டு ஆனந்தப் படுகிறார்கள்.
தாங்கள் சார்ந்துள்ள மதங்களின் குறைபாடுகளை மறுக்கவும் முடியாமல் நியாயப்படுத்தவும் முடியாமல் விரக்தியின் எல்லையையே அடைந்துவிட்ட இவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாத்தைச் சீண்டிவிட்டு திருப்தி கொள்வார்கள்.
ஷாபானு பிரச்சனையிலிருந்து பாபரி மஸ்ஜித் விவகாரம் வரை இவர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கரைக்கு இவர்களின் இந்த விரக்தி மனப்பான்மையே காரணமாகும். இப்போது சாத்தானின் வசனங்கள் கிடைத்திருக்கிறது. விடுவார்களா? சாத்தானின் வேலையைக் காட்டத் துவங்கி விட்டனர்.
சாத்தானின் வசனங்களை நியாயப்படுத்தும் முயற்சியில் வழக்கம் போலவே ஹிந்துவும், இந்தியன் எக்ஸ்பிரஸும்  களத்தில் இறங்கியுள்ளன.
            21.10.1988 இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் அதன் பிரதம ஆசிரியர் அருண்ஷோரி சாத்தானின் வசனங்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
சாத்தானின் வசனங்களுக்கு வக்காலத்து வாங்குவதோடு திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு விமர்சனமும் செய்திருக்கிறார்.
திருக்குர்ஆன் பிற மதத்தவர்களைப் புண்படுத்துகிறது. வன்முறையைத் தூண்டுகின்றது என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அவரது வாதங்களை விமர்சிப்பதற்கு முன் சாத்தானின் வசனங்கள் பற்றிய விபரம் தெரியாதவர்களும் இருக்கலாம் என்பதற்காக அதைச் சுருக்கமாய் பார்ப்போம்.
சல்மான் ரூஷ்டி என்பவன் நாவல் எழுத்தாளர். இவன் சாத்தானின் வசனங்கள் என்று ஒரு நாவல் எழுதினான் . பெயருக்குத் தான் அது நாவலே தவிர உண்மையில் அது நாவலல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதற்கே அதை அவன் எழுதியுள்ளான். திருக்குர்ஆன் ஷைத்தானுடைய வசனங்கள் என்பது அந்த நாவலின் மையக் கருத்து.
இது குறித்து பீஜே அப்போது எழுதி இலவசமாக வெளியிட்ட நூலில் விபரம் காண்க - வேதம் ஓதும் சாத்தான்கள்
உலகின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம்கள் அந்த நாவலுக்குத் தடை விதிக்க வேண்டுமென போராடினார்கள். இஸ்லாமியர்களுடைய ஆட்சியின் கீழ் இல்லாத மேலை நாடுகள் பலவும் அந்த நாவலுக்குத் தடை விதித்து விட்டன.
ஏற்கனவே டெக்கான் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கீழ்த்தரமான முறையில் சிறுகதை ஒன்றை வெளியிட அதனால் கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக அதன் தலைநகர் பெங்களூரில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின. அது போன்ற நிலைமை இனி மேல் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் முன் யோசனையுடன் அந்த நாவலுக்கு இந்தியாவிலும் தடை விதிக்கப்பட்டது.  வரும் முன் காக்கும் எந்த புத்திசாலி அரசாங்கமும் செய்யக் கூடிய ஒரு காரியத்தைத் தான் இந்திய அரசும் செய்தது.
உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான ஒரே தலைவராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழித்தும் பழித்தும் பேசுகின்ற நூலுக்குத் தடை விதித்ததை அருண்ஷோரி போன்ற மாற்றாந்தாய் மணம் கொண்டவர்களால் ஜீரணிக்க முடியுமா? இதை அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? பொங்கி எழுந்திருக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியோ, விபரீதங்கள் பற்றியோ, ஏற்படும் விளைவுகளைப் பற்றியோ, விபரீதங்கள் பற்றியோ பலியாகும் மனித உயிர்களைப் பற்றியோ இவர்களுக்கென்ன கவலை.?
சாத்தானின் வசனங்களைத் தடை செய்யக் கூடாது என்பதற்கு அருண்ஷோரி எடுத்து வைக்கும் வாதங்களைக் காண்போமா?
இந்த நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்திய ஸையத் ஷஹாபுத்தின் எம்.பி அவர்கள் அந்த நாவலைப் படித்துப் பார்க்கவே இல்லை. அவரது கோரிக்கையை ஏற்று அதற்குத் தடை விதித்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் அந்த நூலைப் படித்துப் பார்க்கவில்லை. ஒரு நூலைப் படித்துப் பார்க்காமலேயே தடை செய்வது என்ன நியாயம்? என்கிறார் அருண் ஷோரி.
அதில் கூறப்பட்ட கருத்தையும் வாதங்களையும் விமர்சனம் செய்வதாக இருந்தால் அதைப் படித்துப் பார்க்க வேண்டியது அவசியம் தான். அதனால் ஏற்படும் விளைவுகளின் அடிப்படையில் தடை கோருவதற்கு அந்த நூலைப் படித்துப் பார்க்கும் அவசியம் இல்லை. அசாதரணமான சூழ்நிலையில் அது உலகின் பல பாகங்களிலும் அந்த நூல் ஏற்படுத்திய கொந்தளிப்பை வைத்தே அதன் தரத்தை அறிந்து கொள்ள முடியும். படித்துப் பார்க்காமலேயே ஏனைய பகுதிகளில் அது ஏற்படுத்திய விளைவுகளைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.
படித்தவர்களும், பண்பாடு நிறைந்தவர்களும், விமர்சனங்களை ஜீரணித்துக் கொள்பவர்களும், எளிதில் உணர்ச்சி வசப்படாதவர்களும் நிறைந்த மேலை நாடுகளிலே அந்த நூலுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து மேலைநாடுகள் பல அந்த நாவலுக்குத் தடை விதித்து விட்டன. நாகரீகமாக எதையும் அணுகக் கூடிய மேலை நாட்டு மக்களிடமே கொந்தளிப்பை  இந்த நாவல் ஏற்படுத்தி விட்டது என்றால் அந்த நுல் வெறும் விமர்சனமாக இருக்கவில்லை. மாறாக இழித்தும் பழித்தும் பேசும் மஞ்சள்  புத்தகமாக அது உள்ளது என்பதை உணரலாமே?
மேலை நாட்டு மக்களாலே ஜீரணிக்க முடியாத அளவுக்கு அந்த நாவல் படிப்பறிவற்ற எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற இந்திய மக்களிடம் அதை விட மோசமான விளைவுகளை அல்லவா ஏற்படுத்திவிடும். அங்கே பேராட்டம் என்றால் இங்கே கலவரங்களல்லவா ஏற்படும். இதைக் கூட இந்தப் புத்திசாலிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு பானத்தை அருந்திவிட்டு பலரும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த அரசாங்கம் அந்தப் பானத்துக்குத் தடை விதிக்கிறது என்றால் அருண்ஷோரி போன்ற அதிமேதாவிகள் நீ அதைக் குடித்தாயா? என்று கேட்பார்கள் போலும். அதன் சுவை பற்றி ஒருவன் பேசுவதாக இருந்தால் குடித்துப் பார்த்தாயா என்று கேட்கலாம். அதன் விளைவைப் பற்றி பேசுவதற்கு குடித்தவர்கள் செத்து மடிந்து கொண்டிருப்பதே போதிய ஆதாரம் அல்லவா? குடித்துப் பார்க்காமலே விஷம் என்று முடிவு செய்ய முடியாதா? இதெல்லாம் அருண்ஷோரிக்குத் தெரியும். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட மனோ பாவமே இவ்வாறு அவரை எழுதச் செய்கிறது.
பிறர்  புண்படுவார்கள் என்பதற்காக ஒரு நூல் தடுக்கப்பட வேண்டுமென்றால் திருக்குர்ஆனும், பைபிளும் தடுக்கப்பட வேண்டுமே? பிற மதத்தவர்கள் புண்படும் வாசகங்கள் குர்ஆனிலும் பைபிளிலும் உள்ளன என்கிறார் அருண்ஷோரி. தன் கூற்றுக்கு ஆதாரமாக குர்ஆனின் சில வசனங்களையும் எடுத்து வைக்கிறார். இந்த வாதத்தில் அவர் பல தவறுகள் புரிகிறார்.
பிறர் புண்படுவார்கள் என்ற காரணத்துக்காக எதையும் தடை செய்ய முடியாது. மனிதனின் எந்தப் பேச்சும் எந்த எழுத்தும் எவரையாவது புண்படுத்தத் தான் செய்யும். சாத்தானின் வசனங்கள் பிறர் புண்படும் வகையில் மட்டும் இருக்கவில்லை. பிறர் ஆத்திரப்படும் விதத்தில் அமைந்துள்ளதாலேயே அது தடை செய்யப்படுகிறது. விமர்சனங்கள் புண்படுத்தலாம். ஆனால் ஏச்சும் வசைமாரியும் புண்படுவதையும் தாண்டி ஆத்திரத்தை ஏற்படுத்திவிடும்.
சாத்தானின் வசனங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று கோரிய முஸ்லிம்கள் முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் தன் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறாரே அருண் ஷோரி அவரைக் கைது செய்து வேண்டுமேன்றோ, அவரது பத்திரிக்கைக்குத் தடை விதிக்க வேண்டுமென்றோ கோரவில்லை. விமர்சனங்களையே முஸ்லிம்கள் ஜீரணிக்க மாட்டார்கள் என்றால் அருண் ஷோரியின் இந்த விமர்சனத்தை எப்படி ஜீரணித்துக் கொண்டார்கள்? இதற்கு முன் ஷாபானு விவகாரத்தில் அவர் செய்த விமர்சனங்களை எப்படி ஜீரணித்துக் கொண்டார்கள்?
ஒருவனுடைய கொள்கையை - கோட்பாட்டை விமர்சனம் செய்வது வேறு. அந்தக் கொள்கைக்குரிய மனிதனை ஏசுவது , பழிப்பது, எள்ளி நகையாடுவது என்பது வேறு.
இந்த வித்தியாசத்தை முஸ்லிம்கள் சரியாக புரிந்து வைத்திருக்கின்ற காரணத்தினால் தான் அருண் ஷோரியின் விமர்சனத்தை ஜீரணிக்கிறார்கள். சாலமன் ரஷ்டியின் நாவல் விமர்சனமாக இருக்கவில்லை. மாறாக தனி நபரை நூறு கோடி மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒருவரை தரக் குறைவாகச் சித்தரிக்கின்றது. மேலை நாட்டு மக்களிடம் அது ஏற்படுத்திய விளைவே அதற்குச் சான்றாக உள்ளது.
அருண்ஷோரியின் இந்த வாதங்கள் யாவும் இந்த இந்த காரணங்களால் சரியில்லை என்று நாம் கூறினால் அது விமர்சனம். அருண்ஷோரி ஒரு முட்டாள், கிறுக்கன், மதவெறியன் என்று கூறினால் அது விமர்சனமாகுமா? இரண்டையும் ஒரே மாதிரித் தான் அருண்ஷோரி எடுத்துக் கொள்வாரா?
சல்மன் ருஷ்டியின் நாவல் விமர்சனமாக இருந்திருந்தால் அதை முஸ்லிம்கள் தக்க முறையில் எதிர் கொண்டு பதிலளிப்பார்கள். அவ்வாறு இல்லாமல் வெறும் அவதூறாகவும் தூற்றுதலாகவும் இருப்பதால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் ஏசுவை கடவுளின் குமாரர் என்று நம்புகின்றனர். கடவுளாகக் கருதுகின்றனர். ஆனால் திருக்குர்ஆன் 4:171, 5:17, 5:72, 5:75, 5:77,19:35, 43:57 ஆகிய  வசனங்கள் ஏசு கடவுளின் குமாரர் அல்ல. மனிதர் என்கிறது. இது கிறிஸ்துவத்தின் ஆணிவேரையே தகர்க்கின்றது. இதனால் கிறிஸ்தவர்கள் புண்பட மாட்டார்களா? அதனால் குர்ஆனைத் தடை செய்ய வேண்டுமல்லவா? என்ற ரீதியில் தன் விஷமமான வாதத்தை எடுத்து வைக்கிறார் அருண்ஷோரி.
அவர் குறிப்பிட்டுள்ள வசனங்கள் யாவும் கடவுளுக்கு மனைவி மக்கள் இருக்க முடியாது என்றும், ஈஸா அலை (இயேசு) கடவுளின குமாரர் அல்ல என்றும், சொல்வது உண்மையே. அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார் என்றே குர்ஆன் கூறுகிறது. இதில் ஈஸா அலை அவர்களை தரக்குறைவாகவோ, கீழ்த்தரமாகவோ சித்தரிக்கவில்லையே. கண்ணியமான முறையில் திருக்குர்ஆன் விமர்சனம் செய்கிறது.
இது விமர்சனமாக இருப்பதனால் தான் கிறஸ்தவ சமுதாயத்தினர் 14 நூற்றாண்டுகளாக இதை ஜீரணித்து வருகின்றனர். முஸ்லிம்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அருண் ஷோரியின் விமர்சனக் கட்டுரையை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொண்டார்களோ அதே போல் குர்ஆனின் விமர்சனத்தை கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
சல்மான் ருஷ்டியின் நாவலையும் இதையும் ஒரே நிலையில் அருண்ஷோரி கருதுவது அவரது அறியாமையை பறைசாற்றுகிறது.
இஸ்லாத்தின் கொள்கைகளை - கோட்பாடுகளைத் தர்க்க ரீதியாக விமர்சனம் செய்யத் திராணி இருந்தால் எவன் வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அதற்கு முறையான பதில் அளிப்பவர்கள் ஏராளமாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கின்றனர். இதை அருண்ஷோரி உணர்வது நல்லது.
போர்க் களங்களில் எதிரிகளைக் கொல்லுங்கள். வெட்டுங்கள் என்றெல்லாம் கூறுகின்ற சில வசனங்களையும் அருண்ஷோரி விமர்சிக்கிறார். கண்ட இடத்தில் கொல்லச் சொல்கிறது குர்ஆன் என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார். அவர் எடுத்து வைத்த அந்த வசனங்களுக் கெல்லாம் யூசுப் என்ற அறிஞர் சரியான பதில் அளித்து அது இந்தியன் எக்ஸ்பிரஸ்  27.10.88 இதழில் வெளியாகி விட்டதால் அதற்கு நாம் பதில் அளிக்கவில்லை.
இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களை கொல்லச் சொல்கிறதா என்பதை அறிய
 குர்ஆன், பைபிள் என்றெல்லாம் குதிக்கும் இந்த அருண்ஷோரி தன்னுடைய புராண இதிகாசங்கள் பற்றி மூச்சு விடவில்லை. குறைந்த பட்சம் மனுஸ்மிருதி பற்றியாவது குறிப்பிட்டிருந்தால் அவரைக் கொஞ்சமாவது நேர்மையாளர் என்று கூறலாம். இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாகவே இவர் இப்படி எழுதத் துவங்கியுள்ளார் என்பதற்கு இதுவே சான்று.

No comments:

Post a Comment