பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

கொலுசு அணியலாமா


கொலுசு அணியலாமா

 நான் கால் கொலுசு அணிந்திருக்கிறேன் அதில் நடக்கும் பொது சிறு ஓசை எழுகிறது இப்படி அணிவது கூடுமா? நடக்கும் போது கொலுசிலிருந்து ஓசை வரும் கொலுசுகளை அணிவது மார்க்கத்தில் தடையா?  இல்லை சொந்த வீட்டுக்குள் இருக்கும் போதாவது இப்படி அணியலாமா? அதுவும் கூடாதா?
பதில் :
பெண்கள் சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்து கொலுசு அணியலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் கொலுசு அணிந்துள்ளனர்.
3039 حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلَاخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ رواه البخاري
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உஹுதுப் போரின் போது பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களுடைய கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
புகாரி (3039)
கொலுசு அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவதும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சப்தம் எழுப்பும் கொலுசுகளை அணிந்து செல்வதும் கூடாது.
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(31)24
பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் (24 : 31)
எனவே அந்நிய ஆண்கள் பார்க்காத வகையில் ஒலி எழுப்பாத கொலுசை அணிவது கூடும். நீங்கள் உங்கள் வீட்டுக்குள் இருக்கையில் எந்த வகையான கொலுசையும் அணிந்து கொள்ளலாம்.

4 comments:

 1. அஸ்ஸலாம் அலைக்கும். சலங்கை ஒலி, இசைக் கருவிகள் போன்றவை ஷைத்தானுக்கு விருப்பமானவை என்றும், வீட்டில் சலங்கை ஒலி கேட்டால் மலக்குமார்கள் வீட்டிற்குள் வருவதை வெறுப்பார்கள் என்பது போன்ற கருத்திலும் தவ்ஹீத் பயான்களில் ஹதீஸ்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் குழந்தைகளின் கொலுசுகளில்கூட சலங்கையை கழற்றிவிட்டுதான் போட்டுவிடுவோம். ஆனால், //நீங்கள் உங்கள் வீட்டுக்குள் இருக்கையில் எந்த வகையான கொலுசையும் அணிந்து கொள்ளலாம்// என்ற பிஜே அண்ணனின் பதில் இதை அனுமதிக்கும் விதத்தில் உள்ளதே? நான் மேலே சொன்னதுபோன்ற கருத்தில் எந்த தடையும் ஹதீஸ்களில் இல்லையா? தயவுசெய்து உடனே விளக்கவும்.

  ReplyDelete
 2. Mr .Abc : கேட்பதை எப்போதும் ஆதரத்தோடு கேட்டால் நன்றாக இருக்கும் .
  உங்கள் ஆதாரத்தை வெளியிடுங்கள். இன்ஷாஅல்லாஹ் அதற்க்கு பதில் தரப்படும் .
  நன்றி

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் அவ‌ர்களே, என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லையென்று நினைக்கிறேன்.

  //சலங்கை ஒலி, இசைக் கருவிகள் போன்றவை ஷைத்தானுக்கு விருப்பமானவை என்றும், வீட்டில் சலங்கை ஒலி கேட்டால் மலக்குமார்கள் வீட்டிற்குள் வருவதை வெறுப்பார்கள் என்பது போன்ற கருத்திலும் தவ்ஹீத் பயான்களில் ஹதீஸ்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்// என்று குறிப்பிட்டுள்ளேன். பயான்க‌ளில் கேட்ட ஹதீஸ்களின் ஆதாரங்களைக் குறித்து வைத்துக் கொள்ள பெரும்பான்மையான நேரங்களில் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால்தான் ஆதாரம் சொல்லவில்லை. என்னுடைய கேள்வி,

  //'நீங்கள் உங்கள் வீட்டுக்குள் இருக்கையில் எந்த வகையான கொலுசையும் அணிந்து கொள்ளலாம்' என்ற பிஜே அண்ணனின் பதில் இதை அனுமதிக்கும் விதத்தில் உள்ளதே? நான் மேலே சொன்னதுபோன்ற கருத்தில் எந்த தடையும் ஹதீஸ்களில் இல்லையா?// என்பதுதான். அதுபோன்ற கருத்துகளில் எந்த ஹதீஸும் இல்லையென்றால் சரி. அப்படி இருக்குமானால் பிஜே அண்ணனின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லலாமே? அதோடு நாமும் அதன் விளக்கத்தைப் பெறலாமே என்றுதான் கேட்டேன். தயவு செய்து பதில் தரவும்.

  ReplyDelete