பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 24, 2010

தற்கொலை தாக்குதலை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?

தற்கொலை தாக்குதலை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?

பொதுவாக தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு முஸ்லிமை நிரந்தர நரகத்தில் தள்ளக் கூடிய மாபெரும் பாவமாக தற்கொலை அமைந்துள்ளது.
இதற்கான ஆதாரம் தேவைப்படுவோர் கீழ்க்காணும் ஆக்கங்களைக் காணலாம்.
பொதுவாக தற்கொலை செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது என்று தெரிந்து கொண்டு தான் இதைச் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.
ஒருவர் போர்க்களத்துக்கு செல்கிறார். அவர் தனது மரணத்தை எதிர்பார்த்துத் தான் செல்கிறார். போர்க்களத்தில் தனக்குத் தானே மரணத்துக்கு தயாராவது எப்படி தற்கொலையில் சேராதோ அது போல் தற்கொலை தாக்குதலும் போரின் ஒரு வகை என்பதால் தற்கொலையில் சேராது என்ற அடிப்படையில் தான் இது நியாயப்படுத்தப்படுகிறது. தற்கொலை தாக்குதலை நியாயப்படுத்த வேறு எந்த ஆதாரத்தையும் அதன் ஆதரவாளர்கள் காட்டுவதில்லை.
போர்க்களத்தைப் பொருத்தவரை நாம் உயிருடன் வெற்றி அடைய வேண்டும்; வெற்றி கிடைக்காவிட்டால் வீர மரணம் அடைவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது போர்க்களத்தில் உள்ள எதிர்பார்ப்பு. ஆனால் தற்கொலைத் தாக்குதலில் நாம் உயிரைக் காத்துக் கொண்டு எதிரிகளை அழித்தல் என்பது இல்லை. முற்றிலும் சாவு என்ற ஒரே எதிர்பார்ப்பு தான் உள்ளது.
இலாபத்துக்கும் நட்டத்துக்கும் வாய்ப்பு இருந்தால் அது வியாபாரம் என்றும் நிர்னயித்த லாபத்தை மட்டும் எதிர்பார்ப்பது வட்டி என்றும் இஸ்லாத்தில் வகைப்படுத்தப்படுகிறது. வியாபாரத்தில் லாபம் அடைவது போல் வட்டி மூலம் லாபம் அடைகிறோம் என்று ஒருவர் வாதிடுவது எப்படி தவறானதாக இருக்குமோ அது போல் தான் இந்த வாதமும் தவறாக உள்ளது. 

எதிரியை அழித்து நம்மைக் காத்துக் கொள்வது
முடியாவிட்டால் எதிரியால் அழிக்கப்படுதல்
ஆகிய இரண்டு எதிர்பார்ப்பு தற்கொலைத் தாக்குதலில் இல்லை என்ற வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் யாரும் தற்கொலைத் தாக்குதலை ஆதரிக்க மாட்டார்கள்.

இது போக மற்றொரு வேறுபாடும் இரண்டுக்கும் உள்ளது.
போரில் கொல்லப்படுதல் எதிரிகளின் கையால் நமக்கு ஏற்படுவது. தற்கொலை தாக்குதலில் நம் கையால் நாமே மரணத்தைத் தழுவுதல். எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது.
தற்கொலைத் தாக்குதல் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பெரும் பாவம் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment