பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா
என்னிடம் ஒருவர் ஒரு மார்க்கத் தீர்ப்பு கேட்கிறார் அதாவது அவர் சில வருடங்களுக்கு முன் மேலை நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் தன்னுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டா.ர் பல வருடங்கள் ஓடி விட்டன ஆனால் இது இவருக்கு இப்போது மிக உறுத்தலாக இருக்கிறது .அதனால் என்ன செய்வது தெரியாமல் தத்தளிக்கிறார்  அந்த ரூபாய்களை அதே வங்கிக்கு திருப்பி அனுப்பிவிட நினைக்கிறார் .முஸ்லிம்களைக் கருவறுக்கும் இத்தகைய நாடுகளின் வங்கிக்கு பணத்தை த்திருப்பி அனுப்ப நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பணத்தை சத்தியத்தைச் சொல்வதற்காக பயன்படுத்தலாமா
வாக்கு மீறுவதும், நம்பிக்கை மோசடி செய்வதும் எந்த ஒரு முஸ்லிமிடமும் இருக்கக் கூடாது. நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தைப் பேணுவதும் அவர்களுக்குரிய பொருளை முறையாகக் கொடுத்து விடுவதும் அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் தனது எதிரிகளுடன் எத்தனையோ ஒப்பந்தங்களைச் செய்தார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஒன்றில் கூட அவர்கள் மோசடி செய்ததில்லை.
ஒரு சாராரின் மீதுள்ள வெறுப்பால் நாம் அநியாயம் செய்துவிடக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(8)5
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 8)
பிறருக்கு மோசடி செய்வதை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவூத் 2936
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, "இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 6177
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) "உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு அவர்கள், "மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!'' என்று கூறினார்கள்..
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 164
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 4678
ஹலாலான வழியில் கிடைத்த நமக்குரிய பொருளை நல்வழியில் செலவு செய்தாலே அதற்குக் கூலி கிடைக்கும். தவறான வழியில் ஈட்டிய பொருளை நல்வழியில் செலுத்தினால் அதை இறைவன் ஏற்க மாட்டான். அதற்கு நற்கூலி தரவும் மாட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் தூய்மையானவன்.  தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 1844
உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தங்களது பொருளாதாரத்தை நமக்கு எதிரான வழியில் செலவு செய்தால் இதைப் பற்றி இறைவன் உங்களிடம் கேள்வி கேட்க மாட்டான்.     
எனவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவதே சரி.

No comments:

Post a Comment