? கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது என்றும், கிப்லாவை நோக்கி கால்களை நீட்டக்கூடாது என்றும் சொல்கிறார்கள். இது சரியா? இது சரி என்றால் இறந்தவரின் உடலை மட்டும் கிப்லாவை நோக்கி கால்களை நீட்டி வைப்பது ஏன்?
! கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் தெளிவான கட்டளை பிறப்பித் துள்ளனர். (பார்க்க புகாரி)
அது போல் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பக் கூடாது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (பார்க்க புகாரி )
ஆனால் கிப்லாவை நோக்கி கால்களை நீட்டக்கூடாது என்று திருக்குர்ஆனிலும் தடை விதிக்கப்படவில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இதற்குத் தடை ஏதும் காணப்படவில்லை.
அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுக்காத ஒன்றை வேறு யாரும் தடுப்பதற்கு அதிகாரம் இல்லை. அல்லாஹ் எதையும் மறக்கக்கூடியவனல்லன். கஃபாவை நோக்கி கால் நீட்டக் கூடாது என்பது இறைவனின் விருப்பமாக இருந்திருந்தால் அதை அவனே கூறியிருப்பான். மக்காவுக்குச் சென்றால் கஃபாவை நோக்கி பலர் கால் நீட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். இதை ஆதாரத்துக்காகக் கூறவில்லை. கூடுதல் தகவலுக்காகச் சொல்கிறோம்.
No comments:
Post a Comment