பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 15, 2010

தேர்தலில் எத்தகைய நிலைபாடு சரி?

தேர்தலில் எத்தகைய நிலைபாடு சரி?

அஸ்ஸலாமு அலைக்கும்.நீங்கள் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று உரையாற்றியவீடியோ பார்த்தேன். இந்த அளவுக்கு கயவர்களான காங்கிரஸ் காரர்களை நாம்தேர்தலில் ஆதரிப்பது எந்த விதத்தில் நியாயம்? இவர்களுக்கும் பிஜேபி க்கும்எந்த வேறுபாடும் இல்லை எனும் போது இவர்களை நாம் எப்படி ஆதரிக்கமுடியும்?தயவு கூர்ந்து விளக்கவும்.

தேர்தல்நிலைபாட்டைப் பொருத்தவரை கடந்த காலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால்ஒருவரையும் ஆதரிக்க முடியாது.

அப்போதைய சூழ்நிலையில் எந்த முடிவுசமுதாயத்துக்கு நன்மை தரும் என்ற அடிப்படையில் தான் முடிவு செய்ய முடியும்.

ஜெயலலிதாசெய்த துரோகம் கொஞ்சம் அல்ல. இட ஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்த போதுஅதற்காக அதிமுகவை ஆதரித்தோம்.

கோவை கலவரம் முதல் கருணாநிதி செய்த துரோகமும்சாதாரணமானது அல்ல. ஆனாலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் திமுகவை ஆதரித்தோம்.

இப்போது ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதஇட ஒதுக்கீட்டை காங்கிரஸ் அளித்தால் வரும் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்கும்அவசியம் சமுதாயத்துக்கு ஏற்படும்.

எந்தத் தேர்தலையும் சமுதாயத்துக்கு நன்மையைப் பெற்றுத் தரும் கருவியாக பயன்படுத்துவதே அறிவுடமை. கடந்த காலத் தவறுகளுக்காக தண்டிப்பதற்கு தேர்தலைக் கருவியாக்கினால் சமுதாயத்துக்கு அதனால் நன்மை ஏற்படாது.

அது போல் இப்போது காங்கிரஸ் ஆட்சியிலோ திமுக ஆட்சியிலோ பயங்கரமான கொடுமை நடந்து அதற்கு நியயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக பாடம் கற்பிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்கலாம்.

உதாரணமாக கோவை கலவரத்தில் சமுதாயத்து அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக ஒட்டு மொத்த சமுதாயமும் திமுகவை புறக்கணித்தது.

ஆனால் அதே காரணத்துக்காக இனி வரும் தேர்தல்களில் அதைப் பிரச்சனையாக்கக் கூடாது. அந்த சம்பவம் நடந்து அதை ஓட்டி வரும் தேர்தலில் மட்டுமே இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

இப்படி நடந்து கொண்டால் சமுதாயத்துக்கு அதிக நன்மைகளைப் பெற முடியும். நாம் முஸ்லிமகளுக்கு நன்மை செய்தால் பழையதை மறந்து நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும். என்னதான் நன்மை செய்தாலும் இவர்கள் ஐம்பது வருடத்துக்கும் முன் நடந்தததற்காக நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்ற எண்ணம் வரும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் நமக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள்.

No comments:

Post a Comment