மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா?
என் நண்பர் தன்னுடைய மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா?
இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணமுடிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது.
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمْ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا(23(4
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 23)
5106 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ أَبِي سُفْيَانَ قَالَ فَأَفْعَلُ مَاذَا قُلْتُ تَنْكِحُ قَالَ أَتُحِبِّينَ قُلْتُ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِيكَ أُخْتِي قَالَ إِنَّهَا لَا تَحِلُّ لِي قُلْتُ بَلَغَنِي أَنَّكَ تَخْطُبُ قَالَ ابْنَةَ أُمِّ سَلَمَةَ قُلْتُ نَعَمْ قَالَ لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي مَا حَلَّتْ لِي أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنَا هِشَامٌ دُرَّةُ بِنْتُ أَبِي سَلَمَةَ رواه البخاري
நபி (ஸல்) அவர்களின் துணைவியரானன உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் (ஒரு முறை) "அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரியான) அபூ சுஃப்யானின் மகள் விஷயத்தில் தங்களுக்கு விருப்பம் உண்டா?'' என்று கேட்டேன். அவர்கள், "நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். நான், "(அவளை) நீங்கள் மணந்து கொள்ள வேண்டும்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?'' என்று கேட்டார்கள். நான், "(ஆம்!) மனைவியென்று உங்களுக்கு நான் ஒருத்தி மட்டுமில்லையே! தங்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் இல்லையே!'' என்று கூறினார்கள். நான், "தாங்கள் பெண் கேட்டதாக எனக்குச் செய்தி எட்டியதே!'' என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(என் துணைவியார்) உம்மு சலமாவின் மகளையா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "அவள் என் மடியில் வளர்ந்த வளர்ப்பு மகளாக (இருக்கிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்,) எனக்கும் அவளுடைய தந்தை("அபூசலமா')வுக்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். ஆகவே, உங்களுடைய பெண்மக்களையோ, சகோதரி களையோ என்னிடம் (மணமுடித்துக் கொள்ளுமாறு) பரிந்துரைக்காதீர்கள்'' என்றார்கள்.
புகாரி (5106)
எனவே மேற்கண்ட குர்-ஆன் வசனம் மற்றும் நபிமொழியின் அடிப்படையில், உங்களுடைய நண்பரின் மனைவி உங்களது நண்பருடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் அவரது மனைவியின் சகோதரியை அவர் திருமணம் செய்யக் கூடாது.
No comments:
Post a Comment