பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

? தொழுகையின் போது கடைசி இருப்பில் அமர்ந்து அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகியவற்றை ஓதிய பின்னர், அல்லாஹும்மக்ஃபிர்லீ என்று ஆரம்பமாகும் துஆவை ஓத வேண்டுமா?



அத்தஹிய்யாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்குப் பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம்.

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மின் அதாபி(B)ல் கப்(B)ரி வஅவூது பி(B)(க்)க மின் பி(F)த்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி(B)(க்)க மின் பி(F)த்ன(த்)தில் மஹ்யா வபி(F)த்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி

(இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

நூல்: புகாரி 833

அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நப்(F)ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்பி(எ)ருத் துனூப(B) இல்லா அன்(த்)த, ப(F)க்பி(எ)ர்லீ மஃக்பி(F)ரதன் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூ(F)ருர் ரஹீம்.

(இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.)

நூல்: புகாரி 834, 6326, 7388

அல்லாஹும்மஃக்பி(எ)ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்(எ)(த்)து வமா அன்(த்)த அஃலமு பி(இ)ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த.

(நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.)

நூல்: திர்மிதீ 3343

மேற்கண்ட துஆக்களில் எதையேனும் ஒன்றையோ, அல்லது அனைத்தையுமோ ஓதிக் கொள்ளலாம்.

-> Q/A Ehathuvam Oct 06

No comments:

Post a Comment