பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா


வீட்டில் தொழமுடியுமா?? அதுவும் ஜமாஅத் ஆஹா தொழ முடியுமா விளக்கவும்



ஜமாஅத்தாக தொழ முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் ஜமாஅத்தாக தொழலாம். கடமையான தஒழுகையையும் வீட்டில் ஜமாஅத்தாக் தொழலாம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலில் காயம் ஏற்பட்ட போது ஒரு மாத காலம் அவர்கள் பள்ளிவாசலுக்கு வரவில்லை. அவர்களை நோய் விசாரிக்க நபித்தோழர்கள் வீட்டுக்கு வந்த போது வீட்டில் அமர்ந்த நிலையில் இமாமாக இருந்து தொழுகை நடத்தினார்கள்



378அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால்' அல்லது தோள்பட்டை' கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்க மாட்டேன்' என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள்என்று சொன்னார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாத காலம் தங்கள் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இந்த மாதத்திற்கு இருத்தொன்பது நாட்கள் தாம்என்று கூறினார்கள்

புஹாரி 378

No comments:

Post a Comment