பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

மூக்குத்தி அணிந்த பெண்களால் நாசிக்குள் தண்ணீர்??

?உளூச் செய்யும் போது நாசிக்குத் தண்ணீர் செலுத்த வேண்டுமா? மூக்குத்தி அணிந்த பெண்களால் நாசிக்குள் தண்ணீர் செலுத்த முடியாதே!விளக்கவும்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உளூச் செய்பவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 161

இந்த ஹதீஸின் அடிப்படையில் உளூச் செய்யும் போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்திச் சிந்துவது நபிவழியாகும். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு ஏதும் இல்லை.

மூக்குத்தி அணிவதால் நாசிக்குத் தண்ணீர் செலுத்த முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் மூக்குத்தி அணிந்தவர்கள் கூட நாசியில் சளி ஏற்பட்டால் அதைச் சிந்தாமல் இருக்க மாட்டார்கள். அது போன்று தான் உளூவின் போது நாசிக்குத் தண்ணீர் செலுத்திச் சிந்துவதாகும்.

ஒரு வேளை மூக்குத்தி அணிவதால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் மூக்குத்தி அணியாமல் இருக்க வேண்டுமே தவிர அதற்காக இந்த நபிவழியைப் புறக்கணிக்கக் கூடாது.

--> Q/A Ehathuvam Aug 2007

No comments:

Post a Comment