பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும் போது பெண்கள் லுஹர்??

?வெள்ளிக்கிழமையன்று பள்ளி வாசல்களில் ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டில் லுஹர் தொழலாமா? இவ்வாறு தொழக் கூடாது; ஜும்ஆ முடிந்த பின்னர் தான் தொழ வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே! விளக்கவும்.


ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டில் லுஹர் தொழுவதற்குத் தடையேதும் இல்லை.

ஜும்ஆவிலிருந்து பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், தொழுகை நேரம் வந்தவுடன் தாராளமாக லுஹர் தொழுது கொள்ளலாம்.

ஜும்ஆ நடக்கும் போது பெண்கள் வீட்டில் தொழக் கூடாது என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

--> Q/A Ehathuvam Aug 2007

No comments:

Post a Comment