நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி??
வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றனர்.
• பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவனை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் எனப் பலரும் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இதனால் விபரீதங்கள் ஏற்படுகின்றன.
• மேலும் தேவையில்லாமல் நம் சமுதாயப் பெண்கள் வெளியூர்களில் சுற்றும் நிலை ஏற்படுகிறது. கணவர் போன் செய்தால் வெளியூரில் இருந்து கொண்டே வீட்டில் இருப்பதாக பெண்கள் சிலர் பொய் சொல்லும் நிலைமையும் உள்ளது.
• வீட்டை விட்டு சில பெண்கள் ஓடிப் போவதையும், தவறான உறவு வைப்பதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது. இதைத் தடுக்க வழியே இல்லையா?
ஆண்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்ற பதிலைச் சொல்லாமல் இதற்கு உருப்படியான திட்டம் இருந்தால் சொல்லுங்கள்
அக்பர், பரங்கிப்பேட்டை
பதில் : இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு சமுதாயத்தின் உள்ளூர் தலைவர்களுக்கும் குடிமக்களுக்கும் இருந்தால் மிக எளிதாக இது போன்ற எல்லா தீமைகளையும் 95 சதவிகிதம் தடுத்து நிறுத்தி விடலாம். இப்படி நடக்கும் பெண்களைத் தண்டிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்துவது மட்டும் இதற்கு பயன்படாது. நடக்காமல் தடுப்பது தான் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
ஊரின் அளவைப் பொருத்து தேவையைப் பொருத்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்ய ஒரு ஜமாஅத் தயாராக இருந்தால் இதைச் செய்து நம் சமுதாயப் பெண்களை நாம் காப்பாற்றி விடலாம்.
ஊரின் அனைத்து தெருக்களிலும் தெருவுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். ஒரு கேமரா 500 முதல் 2000 வரை தான் ஆகும்.
ஜமாஅத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பு அறையில் அனைத்தையும் டிஸ்பிளே செய்யும் வகையிலும் பதிவு செய்யும் வகையிலும் ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும். இதற்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகலாம்.
இதைச் செய்து விட்டால் ஒவ்வொரு தெருவிலும்
மக்களின் நடமாட்டம்,
வீடுகளுக்குள் நுழைபவர்கள்,
எவ்வளவு நேரம் கழித்து வெளியே வருகிறார்கள்,
வீட்டில் இருந்து யார் எப்போது வெளியேறுகிறார்கள்
என்பதை கண்காணீப்பு அறையில் இருந்து பார்க்க முடியும்.
விரும்பும் போது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வீட்டில் யாராவது நுழைந்தார்களா? அல்லது யாராவது வெளியேறினார்களா என்பதையெல்லாம் ரீபிளே செய்து பார்க்க முடியும்.
வெளி நாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டால் என் வீட்டில் இந்த நாளில் இந்த நேரம் முதல் இந்த நேரம் வரை யாராவது சென்றார்களா? வெளியேறினார்களா? என்று கண்கானிப்பு அலுவலகத்தில் விசாரிக்கலாம். வெளியூரில் இருந்து கொண்டு வீட்டில் இருப்பதாகப் பொய் சொல்லி இருந்தால் தெரிந்து போய் விடும்.
இப்படியெல்லாம் கண்கானிப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதை அனைவருக்கும் விளம்பரப்படுத்த வேண்டும். நாம் ஒவ்வொரு நேரமும் கண்காணிக்கப் படுகிறோம் என்ற அச்சம் வந்து விட்டால் அடுத்த விநாடியே இது ஒழிந்து போய் விடும்.
இது தவிர கொஞ்சம் வசதி உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இணைய தள வசதியுடன் ஒரு கம்ப்யூட்டரை ஏற்பாடு செய்து கொண்டால் வீட்டில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி விட்டு வீட்டில் நடப்பது அனைத்தையும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கும் வகையிலான சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி எநத நேரமும் நமது வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இந்த யோசனையை ஜமாஅத்துக்கு தெரிவித்து செயல் படுத்திப் பாருங்கள்.
இது குறித்து ஆர்வமுள்ள ஜமாஅத்தினர் என் பெயருக்கு தபால் எழுதினால் இதற்கான வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment