பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

பெண்கள் கார் ஓட்டலாமா?

? கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டலாமா?


பெண்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இஸ்லாம் கூறும் உடை விதிகளைப் பின்பற்றி தாராளமாக வாகனங்களை ஓட்டலாம். நபிகளார் காலத்தில் இருந்த வாகனமான ஒட்டகத்தில் பெண்கள் பயணித்திருக்கிறார்கள். நபிகளார் அதைத் தடை செய்யவில்லை.

ஒட்டகங்கல் பயணம் செய்த (அரபுப்) பெண்கலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்: புகாரி (5082), முஸ்லிம் (4946)

--> Q/A Dheengula Penmani Feb 2008

No comments:

Post a Comment