பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 28, 2010

களியக்காவிளை காட்டுகின்ற அடையாளம் ??

?ஏகத்துவம் மே மாத இதழில், களியக்காவிளை காட்டுகின்ற அடையாளம் என்ற தலையங்கம் கண்டேன். அதில், சுன்னத் ஜமாஅத்தினர் பேசுவதாகப் பொய் சொல்லி தொலைபேசியில் பேசியிருப்பது முழுக்க முழுக்க குர்ஆன், சுன்னாவிற்கு எதிரான செயல். இதற்கு எந்தவொரு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? அவர்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்ததும் அதை விடத் தவறு தானே?


ஜாக் அமைப்பினர் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்; தனி மனித எதிர்ப்பின் காரணமாகக் கொள்கையை விட்டு வெளியேறவும் துணிந்து விட்டனர் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களின் அடிப்படையில் நாம் தோலுரித்துக் காட்டி வருகிறோம்.



களியக்காவிளை விவாதம் தொடர்பாக ஜாக்கின் நிலைப்பாடு எப்படியிருக்கும்? என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நமது மார்க்க அறிஞர்களில் சிலர், 'கொள்கை விஷயத்தில் ஜாக் இயக்கத்தினர் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்' என்ற கருத்தைத் தெரிவித்தனர். சிலர் அதை மறுத்தனர். இந்த நிலையில் ஜாக்கின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

சத்தியத்திற்கு எதிரான கொள்கையுடையவர்களிடமிருந்து உண்மையை வர வைப்பதற்காக அல்லது சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காக, சத்தியத்தின் எதிரியைப் போன்று நம்மைக் காட்டிக் கொள்வதற்கோ, நம்மை மறைத்துக் கொள்வதற்கோ ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் வந்துக் கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்த போது, (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து விட்டாள். உடனே, ''ஸாஃபியே! இதோ முஹம்மத்!'' என்று கூற இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து விட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3033

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ''நான் வருவதை அவனது தாய் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அவன் வெளிப்படையாகப் பேசி இருப்பான்'' என்று கூறுவதை இங்கு கவனிக்க வேண்டும்.

இது போன்று மற்றொரு சந்தர்ப்பத்தில் நபித்தோழர் ஒருவர், தம்மை இஸ்லாத்தின் விரோதி போன்று காட்டிக் கொள்ள அனுமதி கேட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில் அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்து விட்டான்'' என்று சொன்னார்கள். உடனே முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து, ''நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ''நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உஙகளைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''(அவ்வாறு) சொல்'' என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று, ''இந்த மனிதர் (முஹம்மத்) எங்களிடம் தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்து விட்டார்'' என்று (நபியவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறி விட்டு, ''உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்'' என்றும் கூறினார்கள். கஅப் பின் அஷ்ரஃப், ''அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்'' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், ''நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)'' என்று கூறினார்கள்.... (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 4037

இதே அடிப்படையில் தான் சத்தியத்திற்கு எதிரானவர்களை அடையாளம் காட்டுவதற்காக, ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கை உடையவர்கள் போன்று பேசினோம். மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இதில் எந்தத் தவறும் இல்லை.

குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் கஅப் பின் அஷ்ரப் என்பவனைக் கொல்வதற்கு உத்தரவிட்டார்கள். ஆட்சியதிகாரம் இல்லாமல் ஜிஹாத் என்ற பெயரில் கண்டவரையும் கொல்வதற்கு இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

--> Q/A Ehathuvam Magazine Aug 2007

No comments:

Post a Comment