பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

? பள்ளிவாசல்களில் முத்தவல்லிகளாக இருப்பவர்களுக்குரிய தகுதிகள் யாவை? அல்குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தரவும்.



! அல்லாஹ்வின் ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு பல தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவது தகுதி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் இருக்க வேண்டும்.

இணை கற்பிப்போர் தமது (இறை மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 9:17)

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (திருக்குர்ஆன் 72:18)


இன்னார் தான் தொழ வர வேண்டும். இன்னார் வரக்கூடாது எனக் கூறி தொழ வரும் மக்களைத் தடுப்பவராக இருக்கக்கூடாது என்பது மற்றொரு தகுதியாகும்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (திருக்குர்ஆன் 2:114)

மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவேரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். (திருக்குர்ஆன் 8:34)

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்க வில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். (திருக்குர்ஆன் 96:9லி18)

இவை தவிர மற்ற தகுதிகளை பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். (திருக்குர்ஆன் 9:18)

தமிழகத்தில் 90 சதவிகிதம் பள்ளிவாசல்களில் இந்தத் தகுதிகள் இல்லாதவர்கள் நிர்வாகிகளாக இருப்பது தான் முஸ்லிம்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூலக்காரணம்.

No comments:

Post a Comment