? ஒரு சில மார்க்க அறிஞர்கள் ஆலிம்கள், உலமா பெருமக்கள், தங்கள் மார்க்க பிரச்சார மேடைகளில் ''குமர் காரியத்துக்கு தாராளமாக அள்ளிக் கொடுங்கள் அல்லாஹ் பரக்கத் செய்வான்'' என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
! நன்மையான காரியங்களிலும் இறையச்சத்திற்கு உகந்த காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கும் வரம்பு மீறலுக்கும் உதவாதீர்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை (பார்க்க: திருக்குர்ஆன் 5:3)
வரதட்சணை பாவம் என்பதிலும் வரம்பு மீறல் என்பதிலும் சந்தேகம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் கூட தங்கள் பெண்களுக்காக பெரிய அளவில் வரதட்சணை அளிப்பதாக வாக்களிக்கின்றனர். எப்படியும் பிச்சை எடுத்தாவது அந்தத் தொகையைத் திரட்டி விட முடியும் என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ளவே சிரமப்படுபவர்கள் ஒரு லட்சம் வரதட்சணை கொடுக்க முன் வருவதால் நடுத்தர மக்கள் அதை விட அதிகமாகக் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வரதட்சணைக்காக உதவுவதில்லை என்பதில் சமுதாயம் உறுதியாக இருந்தால் வரதட்சணை ஒழியாவிட்டாலும் நிச்சயமாக அதன் அளவு குறையும். தொலைநோக்கோடு சிந்தித்தால் வரதட்சணைக்காக உதவாமல் இருப்பது தான் பெண்களுக்குச் செய்கின்ற உதவியாகும் என்பதை அறியலாம்.
No comments:
Post a Comment