? இறைவனின் நல்ல அடியார்கள் என்பதற்கும் இறைவனின் அடியார் கள் என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரு சபையில் உள்ளவர் களைப் பார்த்து இறைவனின் நல்ல அடியார்களே என்று அழைக்க லாமா? விளக்கம் தரவும்.
சில சொற்பொழிவாளர்கள் தமது உரையைத் துவக்கும் போது ''அல்லாஹ்வின் நல்லடியார்களே'' என்று அழைத்து உரையைத் துவக்குவதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் போலும், ''நல்லடியார்கள்'' என்பது இரண்டு கருத்துக்களில் பயன்படுத்தப்படும் சொல்லாகும். மறுமையில் இறைவனால் நல்லடியார் என்று தீர்ப்பளிக்கப்படுபவர் என்ற கருத்தும் இச்சொல்லுக்கு உண்டு. இந்தக் கருத்தில் எந்த மனிதனையோ, எந்தக் கூட்டத்தையோ நல்லடியார்கள் என்று குறிப்பிடுகின்ற உரிமை யாருக்கும் கிடையாது.
வெளிப்படையான செயல்கள், மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடியாராக நமக்குத் தோன்றுகிறார் என்ற கருத்திலும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்தில் எந்த முஸ்லிமையும் நாம் நல்லடியார் எனக் கூறலாம். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர் நல்லடியாராக இருப்பார் என்று கருதாமல் இவ்வாறு கூறலாம். உங்களில் ஸாலிஹீன்களுக்கு (நல்லடியார்களுக்கு) திருமணம் செய்து வையுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 24:32)
ஒருவரை நல்லடியார் என்று நாம் கருதலாம் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. அல்லாஹ்வின் பார்வையில் நல்லடியார்கள் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. அதை நம்மால் கண்டு பிடிக்க முடியாது. ''என்னை நல்லடியாராக நீர் காண்பீர்'' என்று மூஸா நபியிடம் அவர்களின் மாமனார் கூறியதாகக் குர்ஆன் கூறுகிறது. (பார்க்க : அல்குர்ஆன் 28: 27) இதுவும் இரண்டாவது கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment