பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

சாப்பிடும்போது பேசுவதும் ஸலாம் ??

? சாப்பிடும்போது பேசுவதும் ஸலாம் கூறுவதும், அதற்கு பதில் கூறுவதும் கூடுமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.





! இக்கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னால் அடிப்படையான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் பொதுவாக ஸலாம் பற்றி வலியுறுத்தப்பட்டால் அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஏதாவது ஒரு சந்தர்ப் பத்தில் அந்தக் காரியத்தை செய்யக்கூடாது என்றால் அதற்குத்தான் தனியாக ஆதாரம் கேட்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஸலாம் கூற வேண்டும் என்று பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் சிறுநீர் கழிக்கும்போது ஒருவர் ஸலாம் கூறியபோது அதற்கு பதில் கூறவில்லை என்பதைத் தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் ஸலாமைத் தவிர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தவிர்க்கச் சொன்னதாகவும் ஆதாரம் இல்லை. எனவே கழிப்பிடத்தில் இருக்கும்போது தவிர மற்ற எந்தச் சந்தர்ப்பத்திலும் ஸலாம் கூறலாம். கூறப்பட்ட ஸலாமுக்கு பதிலும் கூறலாம்.

No comments:

Post a Comment