பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் வரிசை எண்கள் ???

? ஏகத்துவத்தில் இடம் பெறும் முஸ்லிம் ஹதீஸ்களின் எண்கள் தவறாக உள்ளன. எனவே சரியான எண்களைத் திருத்தி வெளியிடவும்.



ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் வரிசை எண்கள் ஒவ்வொரு பிரதியிலும் ஒவ்வொரு மாதிரி இடம் பெற்றுள்ளன.

ஹதீஸ்களின் வரிசை எண்களைப் பொறுத்த வரை ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்கள் கொடுத்த எண்கள் கிடையாது. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் ஹதீஸ்களுக்கு வரிசை எண் கொடுத்துள்ளனர்.

ஒரே கருத்தில் இரண்டு விதமான அறிவிப்பாளர் தொடருடன் ஒரு ஹதீஸ் இடம் பெற்றால் ஒரு பிரதியில் ஒரே ஹதீஸாகவும் மற்றொரு பிரதியில் இரண்டு தனித்தனி ஹதீஸாகவும் பதிவு செய்கின்றனர். இது போன்ற பல்வேறு காரணங்களால் ஹதீஸ்களின் வரிசை எண்களில் மாற்றம் ஏற்படுகின்றது.

முஸ்லிமில் தர்கீமுல் ஆலமிய்யா, தர்கீமுல் அப்துல் பாகீ ஆகிய இரு வகையான எண்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த இரண்டுடன் நிற்பதில்லை.

முஸ்லிம் நூலை அச்சிடும் ஒவ்வொரு பதிப்பகத்தாரும் ஒவ்வொரு விதமாக வரிசை எண் கொடுக்கின்றனர். உதாரணமாக அப்துல் பாகீயின் வரிசைப்படி ஹதீஸ் எண் கொடுப்பதிலேயே ஒரு பதிப்பகத்தார் ஒரு விதமாகவும், மற்றொரு பதிப்பகத்தார் வேறு விதமாகவும் ஹதீஸ் எண்ணைக் குறிப்பிடுகின்றனர்.

நம்மிடம் முஸ்லிமின் அரபு மூலப் பிரதிகள் நான்கு பதிப்புகள் உள்ளன. இந்த நான்கு பிரதிகளிலும் நான்கு விதமான எண்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஹதீஸ் எண்ணே இல்லாமலும் ஒரு பிரதி உள்ளது.

தற்போது ஸஹீஹ் முஸ்லிமின் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ள ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவனத்தார் தங்களிடமுள்ள அரபு மூலப் பிரதியில் இடம் பெற்றுள்ள வரிசை எண்ணைத் தமிழாக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பிரதி நம்மிடம் கிடையாது.

நாம் நம்மிடம் உள்ள அரபு மூலப் பிரதியிலிருந்து தான் ஹதீஸ்களை மொழி பெயர்த்து வெளியிடுகின்றோம். அவ்வாறு வெளியிடும் போது நம்மிடம் உள்ள நூலின் வரிசை எண்ணையே நாம் பயன்படுத்தி வந்தோம்.

தற்போது கம்ப்யூட்டரில் ஹதீஸ் சாப்ட்வேர்கள் மூலம் ஹதீஸ்களைத் தேடி எடுப்பதால் அதிலுள்ள எண்களையே நாம் பயன் படுத்துகின்றோம். நமது தரப்பில் ஒரே சீராக ஹதீஸ் எண்கள் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதால் ஹதீஸ் சாப்ட்வேரில் உள்ள ஆலமிய்யா என்ற எண் முறையின் அடிப்படையில் நாம் ஹதீஸ் எண்ணைக் குறிப்பிடுகின்றோம்.

இதனால் தான் முஸ்லிம் தமிழாக்கத்தில் உள்ள எண்ணுக்கும் நாம் குறிப்பிடும் எண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது.


-> Q/A Ehathuvam August 06

No comments:

Post a Comment