பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

ஃபஜினா அமீர் என்று பெயர்??

? எனக்கு மூன்று வயதுடைய மகள் இருக்கிறாள். அவளுக்கு ஃபஜினா அமீர் என்று பெயர் வைத்து, அதை நகராட்சியிலும் பதிவு செய்து விட்டோம். உறவினர்கள் சொன்னதைக் கேட்டு, அர்த்தத்தைப் பார்க்காமல் இந்தப் பெயரை வைத்து விட்டோம். தற்போது அந்தப் பெயர் அரபிப் பெயரா? அதன் அர்த்தம் என்ன? என்று சிலர் சந்தேகத்தை எழுப்புகின்றார்கள். எனவே இந்தப் பெயருக்கு ஷிர்க்கான அர்த்தம் ஏதும் உள்ளதா? இந்தப் பெயரை மாற்றித் தான் ஆக வேண்டுமா? என்பதை விளக்கவும்.




ஃபஜினா, அமீர் ஆகிய இரண்டும் தனித்தனி வார்த்தைகள். இதில் ஃபஜினா என்ற சொல் அரபு மொழியில் காணப்படவில்லை. வேற்று மொழியில் இருந்து அரபு மொழியில் நுழைந்த வார்த்தையாகத் தான் உள்ளது. ''ஒரு வகைச் செடியிலிருந்து சாப்பிடுபவள்'' என்பது இதன் பொருளாகும். அமீர் என்றால் அதிகாரமுடையவர், தலைவர் என்று பொருள்.

பெயர் வைக்கும் போதே நல்ல பொருளுள்ள பெயராகத் தேர்வு செய்து வைக்க வேண்டும். புதுமையான பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் இது போன்ற அனர்த்தமான பெயர்களை வைத்து விடுகின்றார்கள்.

''மாறு செய்யக் கூடியவள்'' என்ற பெயருடைய பெண் குழந்தை உமர் (ரலி) அவர்களுக்கு இருந்தாள். அந்தப் பெயரை மாற்றி அந்தக் குழந்தைக்கு ஜமீலா (அழகானவள்) என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3988

இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற பல ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள் தவறான அர்த்தத்தைத் தரக் கூடிய பெயரை மாற்றியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 6190, 6191, 6192, 6193)

எனவே தவறான அர்த்தங்கள் கொண்ட பெயராக இருந்தால் அதை மாற்றி வைக்க வேண்டும். ஃபஜினா அமீர் என்ற பெயரைப் பொறுத்தவரை தவறான அர்த்தங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

-> Q/A Ehathuvam Sep 06

No comments:

Post a Comment