பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

பெண் குழந்தையின் சிறுநீர் ??

? பெண் குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் அவ்வாடையைக் கழற்றி விட வேண்டும் என்று ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா?


பெண் குழந்தையின் சிறுநீர் பட்டால் ஆடையை மாற்ற வேண்டும் என்று ஹதீஸ் கூறவில்லை. சிறுநீர் பட்ட இடத்தைக் கழுவ வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது.

அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மடியில் இருக்கும் போது, அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். ''வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்க ளின் இடுப்பாடையைக் கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். ''பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: லுபாபா பின்த் அல்ஹர்ஸ்
நூல்: அபூதாவூத் 320

எனவே சிறுநீர் பட்ட இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. அதற்காகக் குளிக்கவோ அல்லது ஆடையை மாற்றவோ தேவையில்லை.

--> Q/A Ehathuvam Jan 07

No comments:

Post a Comment