பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

ஜும்ஆவின் முன் ஸுன்னத் உண்டா

ஜும்ஆவின் முன் ஸுன்னத் உண்டா




ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார். அந்த மடலை அல்ஜன்னத்தில் வெளியிடச் செய்து, அதற்கு நாம் அளிக்கும் விளக்கத்தை அறிந்து கொள்வதற்குக் கூட நண்பருக்குப் பொறுமையில்லை என்பதா? அல்லது இதற்கு வேறு நோக்கம் ஏதும் இருக்கும் என்பதா? நமக்குப் புரியவில்லை.

நோக்கம் எதுவானாலும் செய்யப்பட்ட விமர்சனத்துக்கு விளக்கம் அளிக்கும் கடமை நமக்கு உள்ளது. எனவே, அதுபற்றி விளக்குவது இந்த விஷயத்தில் கூடுதல் தெளிவைத் தரும் என்பதால் அதற்கு விளக்கமளிக்கின்றோம்.

அவரது கடிதம்:

சகோதரர் பி. ஜெய்னுல்ஆப்தீன் (பி. ஜைனுல்ஆப்தீன் இல்லை) அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

1994 ஒக்டோபர் ஜன்னத்தில் ஜும்ஆவுக்கு முன்னால் இரண்டு ரக்ஆத் ஸுன்னத் உண்டு என்பதாக எழுதியிருந்தீர்கள். இது இலங்கையில் குர்ஆன், ஸுன்னா வழியிலுள்ளோருக்கு இரண்டு வகையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நாம் செயல்படுத்தி வந்தது பிழையானது என்றொரு சந்தேகம்.

வஹ்ஹாபிகள் இப்படித்தான். நடந்து வந்த செயலொன்றை ஆய்வெதுவுமின்றி அவசரப்பட்டு ‘பித்அத்’ என்று கூறித் தடுப்பார்கள். சிறிது காலம் சென்றபின் தடுத்தது தவறு, ஆதிகாலத்தில் இருந்து வந்ததுதான் சரியானது என்று கூறி, பழைய நிலைக்குத் திரும்புவார்கள். இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவற்றில் அடுத்தடுத்து எதை வாபஸ் வாங்குவார்களோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் குர்ஆன் – ஸுன்னா பிரசாரத்துக்கு எதிரணியிலுள்ளோர் கதை அளக்கவும், மறைமுகமாக மக்களைத் தூண்டிவிடவும் இடம் உண்டாகி விட்டது.

அண்மையில் குர்ஆன் ஸுன்னா வழியிலுள்ளோருக்கு எதிராக மிம்பர்களை முழக்குவதற்குக் கிடைத்த பெறுமதி மிக்க ஓர் ஆயுதமாக ஆகிவிட்டது எனலாம் -

என்று துவங்குகிறது அவரது கடிதம். கடிதத்தின் இறுதியிலும் இதே கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்:

- உங்களுடைய சர்ச்சையால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? உங்களது ஜன்னத்தை மையமாக கொண்டு குத்பா ஓதுகிறார் ஒரு கதீப். மிகப்பெரியதொரு பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அந்த குத்பா ஓதப்படுகிறது.

ஒரு காலத்தில் ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் இல்லை என்றார்கள். அதனை சரியென நம்பி சில நல்ல மனிதர்கள் தொழுவதை விட்டு விட்டார்கள். இப்பொழுது பழைய நிலைக்கு மீண்டும் உண்டு என்று சொல்கிறார்கள். இந்த நல்ல மனிதர்களின் கடந்த கால அமல்களை வீணாக்கியவர்கள் இவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்?

இவர்கள் இப்படித்தான் ஆய்வின்றி அவசரப்பட்டு நடப்பதைக் கூடாதெனத் தடுப்பார்கள். பின்னர் முட்டிக் கொண்டு தலை கவிழ்ந்தவர்களாக தங்களது முடிவை மாற்றிக் கொள்வார்கள். இத்தகையோர் விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் எச்சரிக்கப்படுகின்ற தொனி எவ்வாறிருக்கின்றது பார்த்தீர்களா? இது குழப்ப வெறியைத் தூண்டுவதாகத் தோன்றவில்லையா? -

கடிதத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் குறிப்பிடும் வாசகங்கள் இவை.

நமது பதில்:

அன்புள்ள நண்பர் அப்துல் வதூத் ஸாஹிப் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

மார்க்கம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்க வேண்டும்ளூ மார்க்கம் சொல்லாதவை எவ்வளவு காலம் அமுலில் இருந்தாலும், எத்தகைய அறிஞர்கள் அதைக் கூறியிருந்தாலும் அதை நிராகரிக்க வேண்டும் என்பதைப் பிரசாரம் செய்துவரும் உங்களிடமிருந்து இது போன்ற வாதத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

பெரிய பெரிய இமாம் கூறியதையெல்லாம் தவறெனத் தெரிந்தால் விட்டுவிட வேண்டும் என்று கூறத் கூடிய நீங்கள் – எவ்வளவு பெரிய இமாமும் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பதைப் போதிக்கக்கூடிய நீங்கள் – இப்படி எழுதுவதை முரண்பாடாகக் கருதாதது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

உண்மையை ஏற்க வேண்டும் என்பதைவிட, யாரோ உங்களைத் தவறாகக் கருதிவிடக் கூடாதுளூ உங்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதில் உள்ள அக்கயரயெ உங்கள் கடிதத்தில் தெரிகின்றது.

நீங்கள் மக்களுக்கு ஒரு சட்டத்தைக் கூறி மக்களும் அதைச் செயல்படுத்த ஆரம்பித்தபின் அந்தச் சட்டம் தவறெனத் தெரிந்தால்கூட உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என்பது உங்கள் கடிதத்திலிருந்து தெரிய வருகின்றது.

ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் உண்டா? இல்லையா? என்ற பிரச்சினையில் நான் எழுதியது தவறு என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டால் கூட, உங்களின் இந்த வாதங்கள் படு பயங்கரமான தவறுகளாகும். இஸ்லாமிய அடிப்படையையே தகர்க்கக் கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை.

குர்ஆன் ஸுன்னாவுக்கு எதிரானவர்களின் விமர்சனத்துக்கு அஞ்சுவதை விட்டு விட்டு அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுங்கள் என்று உங்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ கொள்கைப் பிரச்சினைகளை மக்களுக்கு விளக்கிய நீங்கள், நமக்கு எதிரானவர்களின் இந்த விமர்சனத்திற்கு – முட்டாள் தனமான இந்த விமர்சனத்துக்கு – உரிய விளக்கம் அளிப்பதே கடமை என்பதை ஏன் உணரவில்லை?

‘எவ்வளவு பெரிய அறிஞருக்கும் தவறுதல் ஏற்படலாம் என்பதே எங்கள் அடிப்படைக் கொள்கையாக இருக்கும்போது, எங்களிடம் தவறு ஏற்படாது என்று எப்படிக் கூற முடியும்? என்று எதிரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்!

‘சுய கௌரவம் பார்த்து, நாங்கள் கூறியதில் பிடிவாதமாக இருக்க மாட்டோம். தவறெனத் தெரிந்தால், உடனேயே அதைத் திருத்திக் கொண்டு, பகிரங்கப் படுத்துவோம்’ என்று எதிரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்!

‘எதை எங்களின் பலவீனம் என்று கூறுகிறீர்களோ, அதுவே எங்கள் பலம். நாங்கள் கூறுவதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அல்லாஹ் சில தவறுகளை எங்களிடம் ஏற்படச் செய்கிறான். நாங்கள் தவறெனத் தெரிந்ததும் திருத்திக் கொள்கிறோமா? அல்லது மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி உண்மையை மறைக்கப் போகிறோமா? என்று சோதிக்கிறான். நாங்கள் தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்வோம்’ என்று எதிரிகளுக்குப் பதில் சொல்லுங்கள்!

இவ்வாறு பதில் சொல்வதை விட்டு விட்டு உண்மையை ஏற்கத் தயங்கி மக்களின் விமர்சனத்தைச் சான்றாக்குகிறீர்கள்.

இலங்கை நிலைமையை நீங்கள் சுட்டிக் காட்டிச் சில விபரங்களை எழுதியுள்ளீர்கள். அதுபற்றிப் பின்னர் விளக்குகிறேன். இலங்கை நிலைமைக்கும் தமிழக நிலைமைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

ஏகத்துவக் கொள்கைப் பிரசாரம் தமிழகத்தைவிடப் பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக, உங்களின் தவ்ஹீத் முன்னோர்கள் செய்யாத எந்த ஒன்றையும் செய்யவோ, அவர்கள் செய்ததை விட அதிகமாகச் செய்யவோ உங்களிடம் பெருமளவு தயக்கம் இருப்பதை நேரிலேயே கண்டவன் நான். இலங்கையில் உள்ள தவ்ஹீத் பள்ளிகளில் ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வந்தன. அதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிந்தும், தவ்ஹீத் முன்னோர்கள் தடுக்காத ஒன்றை எப்படித் தடுப்பது? மக்கள் நம்மை என்ன நினைப்பார்கள்? என்பன போன்ற தயக்கமே நீங்கள் இரண்டு பாங்குகளைத் தடுக்காமலிருந்ததற்குக் காரணம். ஒரு சில பள்ளிகளிலாவது இரண்டு பாங்குகள் நிறுத்தப்பட தமிழகத்திலிருந்து நாங்கள் மூன்று தடவை இலங்கைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.

இதை நான் குறிப்பிடக் காரணம் என்னவென்று புரிகிறதா? உங்களிடம் மட்டுமன்றி மொத்த இலங்கைத் தவ்ஹீத் சகோதரர்களிடமும் (மிகச் சிலர் தவிர) இந்த மனப்பான்மை இருக்கிறது. தாம் தவறாகச் செய்துவிட்ட ஒன்றைத் திருத்தினால், மக்கள் விமர்சிப்பார்களே என்று அஞ்சும் நிலையையே ஏற்படுத்தியுள்ளீர்கள்.

பெரும் பெரும் இமாம்கள் கூறியதில் தவறு இருக்கலாம். அவர்களுக்கே கதீம் (பழைய முடிவு) ஜதீத் (புதிய முடிவு) என்று இருவேறு கருத்துக்கள் இருந்துள்ளன என்று கூறிவிட்டு, எங்கள் கூற்றில் தவறு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணுவது சரிதானா என்று சிந்தியுங்கள்!

உண்மைக்கு ஏற்றவாறு உங்கள் மனோ விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, உங்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறுதான் உண்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயாம்?

எங்களைப் பொருத்தவரை நாங்கள் போதித்தவை தவறு என்று தெரிய வந்தால், பகிரங்கமாக அதை ஒப்புக் கொள்வோம். எங்களுடன் இருப்பவர்கள் எங்களிடமிருந்து இதனால் விலகினாலும,; வர இருந்தவர்கள் இதன் காரணமாக வரத் தயங்கினாலும் ஜும்ஆ மேடைகள் எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களின் நிலை மட்டுமில்லைளூ தமிழகத்தில் உள்ள தவ்ஹீத் வாதிகளின் நிலையே இதுதான்.

இலங்கையிலிருந்து இது சம்பந்தமாக உங்களைப் போல் பலர் எழுதியுள்ளனர். ‘இதுவரை செய்தவை தவறு என்று ஏற்றால் எந்த முகத்துடன் மக்களைச் சந்திப்பது?’ என்பதுதான் அத்தனை கடிதங்களின் சாரமாக உள்ளது.

இவ்வாறு சிந்திக்கக் கூடிய – பேசக்கூடிய – எழுதக்கூடியவர்கள் மத்ஹபிலேயே இருந்திருக்கலாம். அங்குதான் மாற்றத்திற்கு இடமில்லை. தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் அதை ஏற்கும் போக்கு இல்லை. தாங்கின் முன்னோர்கள் கூறியதை எப்பாடுபட்டாவது நிலை நிறுத்தும் போக்கு அங்குதான் உள்ளது. தவறை ஒப்புக் கொண்டால் நமது கௌரவம் என்னாவது என்ற சிந்தனை அங்குள்ள ஆலிம்களிடம்தான் உள்ளது. தாங்கள் செய்து வந்தது தவறாகவே இருக்க முடியாதுளூ தங்கள் முன்னோர்களான அறிஞர்களிடம் எந்தத் தவறும் ஏற்பட முடியாது என்பவை மத்ஹபுக்கே சொந்தமானவை.

அந்தப் போக்கை நீங்களும் மாற்றிக் கொண்டு மற்றவர்களிடமிருந்தும் மாற்ற முயலுங்கள்!

‘இனிமேலாவது சர்ச்சைக்குரிய பிரச்சினை எதனையாவது எழுதும்போது சில அறிஞர்களுடன் ஆலோசனைகள் செய்து எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன்’ என்று கடிதத்தின் முடிவில் கூறியிருக்கிறீர்கள்.

நான் எவரிடமும் ஆலோசனைகள் செய்யாமல், தன்னிச்சையாக எழுதியதாக – நீங்கள் அறியாத ஒன்றை அறிந்ததாகக் – குற்றம் சாட்டுகிறீர்கள்.

அடுத்து, ஆலோசனை செய்துவிட்டு எழுதினால,; எந்தத் தவறும் ஏற்படாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதை உங்களின் இந்தப்போக்கு காட்டுகின்றது.

மத்ஹபுகளை நியாயப்படுத்தி சவூதி அரசிலிருந்து ஒரு ஃபத்வா வந்ததைப் பார்த்திருப்பீர்கள். அது பல அறிஞர்கள் – நீங்கள் ஒப்புக் கொள்ளக கூடிய பல அறிஞர்கள் – பரிசீலனை செய்துதான் வெளியிடப்பட்டது.

மக்களின் விமர்சனத்திற்து அஞ்சி, முடிவை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்களில் ஆயிரம் பேரிடம் ஆலோசனை செய்வதைவிட, அல்லாஹ்வுக்கு அஞ்சி, தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளக் கூடிய தனி ஒருவரின் கருத்தில் தவறுகள் குறைவாக இருக்கும்.

மக்களின் விமர்சனத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய உங்களிடமே ஆலோசனை கேட்டால் – தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளக்கூடாது என்பது உங்கள் உள் மனதிலேயே இருப்பதால் – என்ன ஆலோசனை கூறுவீர்கள்? இப்போது பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்பதைத் தவிர, வேறு எந்த ஆலோசனையையும் கூற மாட்டீர்கள். எனவேதான், இத்தகைய மனப்போக்கு இல்லாதவர்களிடம் மட்டும், அவ்வப்போது, சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஆலோசிக்கிறேன்.

உங்களின் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்ட அடிப்படைக் கோளாறைச் சுட்டிக் காட்டவே இந்த விளக்கம். இனி ஜும்ஆவின் முன் ஸுன்னத் பற்றி நீங்கள் எழுதிய மறுப்பை ஆராய்கிறேன்.

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தயில் காலத்திற்குக் காலம் பல வித்தியாசமான சிந்தனை அலைகள் வந்து விட்டுப் போகின்றன. இவை ஏதோ ஒரு விதத்தில் முஸ்லிம்கள் மத்தியில் சில பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டுச் செல்கின்றன. அந்த வகையில் எனது நீண்ட நாள் அவதானத்தின் படி – இலங்கையில் பலவேறு சமயங்களில் தோன்றி மறைந்து, மீண்டும் புதிப்பிக்கப்பட்டு, அண்மைய நாட்கள் வரையில் சில பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சில கருத்துக்கள் பற்றி, எனது சில அவதானங்களை முன்வைக்க விரும்புகிறேன். குறிப்பிட்ட அந்த கருத்துக்கள் இஸ்லாமிய ரீதியில் சரியானதா? பிழையானதா? என்பது பற்றிய ஆயிவில் ஈடுபடும் நோக்கமில்லை. மாற்றமாக அந்தக் கருத்துக்கள் பற்றிய எனது மன உணர்வுகளை வெளியிடவே விரும்புகிறேன்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணிய ஒரு கருத்து தான், ஸகாத் ஆயுளில் ஒரு தடவை மாத்திரம் கொடுத்தால் போதுமானது என்பது. அதாவது குறித்த ஒரு தொகை செல்வத்தில் ஸகாத் கொடுபட்டால், அடுத்த வருடம் அந்த மேலதிக செல்வத்திற்கு மாத்திரமே கொடுத்தல் வேண்டும். அடிப்படை செல்வம் ஸகாத் கடமையாகும் நிலையை அடைந்திருப்பினும் சரியே, இப்படி ஒரு இஜ்திஹாத் தோன்ற முடியுமா? என்ற கேள்விகளுக்கு அப்பால், இந்த சிந்தனை சமூகத்தில் உண்டு பண்ணும் எதிர்மறைப் பாதிப்பைப் பற்றி சற்று சிந்தித்தல் வேண்டும்.

இஸ்லாமிய பொருளாதார ஒழுங்கில் ஸகாத் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. வருடா வருடம் தனது செல்வத்தில் 2 ½ வீதத்தை ஏழைகளுக்காக ஒதுக்குவது என்பது மொத்தமான வடிவில் பார்க்கின்ற பொழுது இஸ்லாமிய அரசின் முக்கிய வருமான மூலமாக மாறுகின்றது. அதிலும், குறிப்பாக ஸகாத் என்பது ஏழைகளுக்கான நிதியம் என்ற வகையில் ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை ஒழுங்காக காணப்படுகிறது. வேறெந்த பொருளாதார முறைகளிலும் காணப்படாத இஸ்லாத்திற்கேயுரிய தனிச் சிறப்பு வாய்ந்த முறைமைதான் ஸகாத் என்பதாகும்.

வறுமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பிரத்தியேக ஒருங்கு ஸகாத், என்றிருக்கும் போது, அதனை ஆயுளில் ஒருதடவை மாத்திரம் கொடுப்பதனால் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? இன்று இஸ்லாமிய அரசோ இஸ்லாமிய சமூக ஒருங்கோ காணப்படாத நிலையில், உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் பரவலாக வறுமையில்பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில், ஸகாத் சேகரிப்பும் விநியோகமும் திட்டமிட்ட ஒரு நிறுவன ஒழுங்கில் நடைபெறுமாக இருந்தால் முஸ்லிம்களின் 75 வீதத்துக்கு அதிகமான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றிருக்கின்ற பொழுது, இந்த ஸகாத்தை கொச்சைப்படுத்திவிட்டால் என்றைக்குமே முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே இருப்பார்கள்ளூ எழுந்துகொள்ளவே மாட்டார்கள்.

ஒரு சமூகத்தின் இருப்புக்கு பொருளாதாரம் இன்றியமையாத ஒரு காரணி, அதனைத்தான் அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது: ‘உங்கள் வாழ்க்கையின் அத்திவாரமாக அல்லாஹ் ஆக்கிவைத்த செல்வத்தை புத்தி குறைந்தவர்களிடம் கொடுக்காதீர்கள்.’ (அந்நிஸா:5) இந்த பொருளாதாரம் சிதறிய நிலையிலன்றி ஒரே இடத்தில் குவிக்கின்ற போது அதன் பலம் பன்மடங்காகிறது. இத்தகைய ஒரு பாரிய பணிதான் ஸகாத் ஊடாக நடைபெறுகிறது. இந்தப் பாரிய பொளாதார செயற்பாட்டைப் பலவீனப்படுத்தும் வேலையாகத்தான் ஸகாத் பற்றிய முன்னைய கருத்து அமைந்துள்ளது.

முஸ்லிம்களை வறுமையை விட்டு எழுந்து கொள்ள விடாமல் தடுக்கின்ற முஸ்லிம்களின் பாரிய பொருளாதார சக்தியை அடித்து வீழ்த்த நினைக்கின்ற இத்தகைய கருத்துக்களையெல்லாம், இதுவும் ஒரு இஜ்திஹாத் என்று பார்க்கத் தோன்றவில்லை. முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்கின்ற இந்தக் கருத்துக்கள் ஒரு தூய்மையான இஜ்திஹாதாக இருக்க முடியாது. இவற்றிற்குப் பின்னால் ஏதேனும் இருக்குமா? ஏன்று கூட சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இனி மற்றோர் கருத்துக்கு வருவோம். ‘இஸ்லாமிய கிலாபத் அவசியமில்லை. கிலாபத் இல்லாமலேயே இஸ்லாத்தின் தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமான பகுதிகளைப் பின்பற்றிவிட முடியும் என்பது, கிலாபத் இல்லாமல் இஸ்லாத்தின் பெரும் பகுதியை நடைமுறைப்படுத்த முடியுமா? முடியாதா?’ என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இஸ்லாமிய கிலாபத் என்பது, ஒரு சமூக கட்டுக்கோப்பு ஒரு தலைமை இருந்து, சில சட்ட ஒழுங்குகளை இட்டு தனக்குக் கீழுள்ளவர்களை நிர்வகிக்கும் முறைமை. இந்த முறைமை பின்பற்றப்படுகின்றபோதுதான் ஒரு சமூகம் பூமியில் கால்பதிப்பது சாத்தியமாகிறது. ஒரு சமூகம் கலந்து கரைந்து காணாமல் போகாமல் பாதுகாப்பதும் அந்த முறைமைதான்.

துலைமை ஒன்று இருந்து அதற்கு கட்டுப்படுகின்ற பண்பு இல்லாது போகின்றபோது, சமூகக் கட்டுக்கோப்பை பேணுகின்ற ஒழுங்கு விதிகள் இழக்கப்படுகின்றபோது அங்கு ஒரு சமூகம் இருக்க மாட்டாது. சில சிதறிய தனிமனிதர்கள் தான் இருப்பார்கள். இது பலமல்லளூ பலவீனம். ஏதிரிகள் இத்தகைய ஒரு சமூகத்தில் இலகுவாய் ஊடுருவுவார்கள். எப்போது ஒரு சமூகம் ஒருமுகப்பட்டு ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு, கட்டுக்கோப்பாய் வாழ்கின்றதோ அப்போதுதான் அந்த சமூகம் பலமாய் இருக்கும். எதிரிகள் உட்புகுந்து சந்தேகங்களையும் விரிசல்களையும் ஏற்படுத்தி விடுவதற்கு முடியாமல் இருக்கும். கிலாபத் அநாவசியம் என்கின்றபோது, கட்டுப்பாடும் கட்டுக்கோப்பும் இழக்கப்பட்டு விடுகிறது. இந்தப் பண்புகளில்லாத ஒரு சமூகம் உருவாக்கப்படுவதென்பது எதிரிகளுக்கு களமமைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைந்துவிடும்.

அடுத்து, சமூக ஒழுங்கின் இருப்பைப் பாதிக்கும் இன்னோர் பிரசாரத்தைப் பாருங்கள். இரகசிய செயற்பாடுகள் அவசியமில்லை. பகிரங்கமாகவே செயல்பட வேண்டும் என்பது. இரகசியச் செயற்பாட்டுக்கு ஆதாரம் இருக்கின்றதா? அது சுன்னாவா இல்லையா? என்ற கேள்விகளை கொஞ்சம் ஒருபுறம் வைத்துவிட்டு, ஒரு சமூகத்தின் இருப்பறிகும் பாதுகாப்பிற்கும் இரகசியச் செயற்பாடு எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஒரு சமூகத்தின் திட்டமிடல் பகுதி இரகசியமாகவே காணப்படல் வேண்டும். திட்டங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றபோது எதிரிகள் இலகுவில் அவற்றை முறியடித்து விடுவர். திட்டமிடலை மறைவாகச் செய்யாத ஒரு சமூகம் ஒருபோதும் வெற்றி பெற மாட்டாது. வெற்றி பெறாமை மட்டுமின்றி அச் சமூகம் நிலைப்பதுவும் சாத்தியமற்றதாகி விடும். குறிப்பாக வளர்நிலையில் இருக்கின்ற சமூகமோ, கட்சியோ, இயக்கமோ இரகசியமாக செயற்படுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சர்வதேச இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு பிடுங்கியெறியக் காத்திருக்கறார்கள். முஸ்லிம்கள் ஒன்று படுகின்றார்களா? திட்டமிடுகிறார்களா? என்று உன்னிப்பாய் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் முஸ்லிம்கள் ஒன்று படுவதும், திட்டமிட்டுச் செயற்பட்டு ஒரு சக்தியாய் மாறுவதும் எதிரிகளுக்கு எப்பொழுதும் அபாயமானதாகவே இருக்கும். எனவே முஸ்லிம்களது செயற்பாடுகளை கண்டறிவதற்காக எல்லா வழிமுறைகளையும் கையாளத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய ஒரு சூழலில் முஸ்லிம்கள் தங்களது திட்டங்களையும் செயற்பாடுகளையும் மிகவும் இரகசியமாகவே அமைத்துக் கொள்ளல் வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்கள் குறித்த பயம் இஸ்லாத்தின் எதிரிகளிடத்தில் பாரியளவு காணப்படுகிறது. எனவே, அவர்களை நுணுக்கமாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் இரகயசி செயற்பாடு கூடாது, ஆதாரமற்ற செயல் எனப் பிரச்சாரம் செய்வது எதிரிகளுக்கு தமது வேலையை இன்னும் இலகுபடுத்திக் கொடுப்பதாய் தான் அமைந்து விடும்.

இனி இன்னுஅமாரு கருத்திற்கு வருவோம். அது இஸ்லாத்தின் மத்ஹபுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். மத்ஹப் என்றால் கக்கூஸ் (மலசலகூடம்) என்று கூறி, மக்கள் மனதுகளில் மத்ஹப் பற்றிய மரியாதையை மலினப்படுத்தி விடுகிறார்கள். அதை விட ஒருபடி மேலே சென்று மத்ஹபுள் யூத கிறிஸ்தவ சதி என்று கூறி இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் தொடராய் அந்த மத்ஹபின் இமாம்கள் தூற்றப்படுகிறார்கள். அவர்கள் பற்றிய மதிப்புணர்வு மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்துகிறது. தொடராய் மற்றொரு வேலையும் நடக்கிறது. அந்த மத்ஹபுகளைச் சார்ந்து நிற்கும் கிராமங்களின் இன்றைய மௌலவிமார்களும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த கண்ணியம் அழிக்கப்படுகிறது. இளைஞர்கள் அவர்களுக்கு எதிராக தூண்டப்படுகிறார்கள். அவர்களது பேச்சை கேட்கவோ கட்டுப்படவோ கிராம மக்கள் தயாராக இல்லை. மௌலவி என்ற ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருந்த கிராம மக்கள் சிதரடிக்கப்படுகிறார்கள்.

மத்ஹபுகள் அவசியமற்றதாக காண்பது என்பது முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றை வேண்டாம் என்பதாகும். இன்றைய உலகின் கலாச்சார அறிவியல் போட்டியில் வெற்றிபெறுவதற்கு அந்தப் பழைய பாரம்பரியங்கள் துணைநிற்கப் போகின்றன. வரலாறு இல்லாத, பாரம்பரியங்கள் இல்லாத ஒரு சமூகம் எதிர்காலத்தில் எழுந்து நிற்கப் போவதில்லை. மத்ஹபுகள் எனும் இஸ்லாத்தின் இந்த சட்டப் பாரம்பரியம், வெறெந்த சமூகத்திற்கும் வாய்த்திராத ஒரு பொக்கஷம். அதனை முஸ்லிமல்லாதோரே ஏற்றுக் கொள்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்த இலங்கையைச் சேர்ந்த வீரமந்திரி என்பவர், இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தை மறந்து விட்டு, நவீன உலக சட்டம் செல்ல முடியாது. ஏனெனில் அப்போது ஒரு சிறகிழந்த பறவை போல்தான் சட்டம் காணப்படும் என்பதாகக் குறிப்பட்டார்.

நிகழ்கால எதிர்கால சட்ட உருவாக்கத்திற்கு மத்ஹபுகள் எனும் அந்த சட்டப் பாரம்பரியம்தான் அத்திவாரமாய் அமைகிறது. இஸ்லாம் ஒரு சட்டமாக சமூகமாக அரசியலாக வளர்வதை இஸ்லாத்தின் எதிரிகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவே, இஸ்லாத்தன் அனைத்துப் பாரம்பரியங்களும் அழித்தொழிக்கப்பட்டால் அதற்கு நிச்சியமாய் எதிர்காலம் இல்லாது போய்விடும். எதிரிகளின் இந்த அபிலாஷையை நிறைவு செய்வதுபோல்தான் மத்ஹபுகளுக்கு எதிரான பிரசாரம் காணப்படுகிறது.

இதன் தொடராய் பள்ளிவாயல்களுக்கும், மௌவிமார்களுக்கும் கட்டுப்பட்டு ஒரு தலைமையின் கீழ்க் காணப்பட்ட கிராமங்கள் மத்ஹப் எதிர்ப்பு பிரச்சாரத்தினால் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. மௌவிமார்கள் ஈனர்களாய்க் காட்டப்பட்டிருக்கிறார்கள். தலைமைக்கு கட்டுப்படும் பண்பு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. வீம்பும் பிடிவாதமும், தான் தோன்றித்தனமும், மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்திலேயே குறிப்பட்டது போல் கட்டுக்கோப்பு சீர்குலைக்கப்பட்ட ஒரு சமூகம் பலசாலியாய் இருக்கமாட்டாது. எதிரிகள் தாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள பொருத்தமான வாய்பபு இதுவாகத்தான் இருக்கும்.

இனி மற்றொரு விடயத்திற்கு வருவோம். இது ஒரு கருத்தல்ல, சமூகக் கட்டுக்கோப்பை கவனமாய் சீர்குலைக்கும் ஒரு செயல்வடிவம். அண்மைக்காலமாய் அதிகரித்து வரும் ஒரு செயல் வடிவம். அதுதான் கிராமங்களில் சில இளைஞர்கள் தூண்டப்பட்டு, அவர்கள் தமக்கென தனியான பள்ளி வாயல்கள் அமைத்துக் கொண்டு செல்வது. ஆரம்ப நாட்களில் வெறும் ஐந்து நேரத் தொழுகைக்காக மட்டுமே அந்தத் பள்ளி வாயல்கள் பயன்பட்டன. ஆனால் தற்போது, ஜும்ஆத் தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கிராமங்களில் கட்டுக்கோப்பை மீறி விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், பேச வந்த சமாதானப் பேச்சுக்களையும் எட்டிக் காலால் உதைத்து விட்டு ஆரம்பிக்கப்பட்டன அந்த ஜும்ஆத் தொழுகைகள். பித்அத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்வது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா என்ற வாதவிவாதத்திற்கப்பால், இதில் இருக்கிற ஒரு அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களின் பிரதான தேவை ஒன்றுபடுவதுதான்ளூ பிரிவது அல்ல. உலகெங்கும் முஸ்லிம்களைப் பீடித்துள்ள பெரிய நோய் பிரிவினைதான். உண்மையில் இது திட்டமிட்டு நுழைவிக்கப்பட்ட நோய். ஏதிரிகளின் முன்னால் முஸ்லிம்களது பலத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சி இது. அந்த எதிரிகளின் முயற்சிக்குப் பலம் சேர்க்கக் கூடாது. கிராமங்களில் நடைபெறும் இத்தகைய பிரிவினைகள் முஸ்லிம்களின் கட்டுக்கோப்பை குலைத்து, எதிர்கால இருப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுதான் எதிரிகளின் ‘நோக்கம்,’ அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கக் கூடாது.

மேலே நான் பேசிய, தற்போது சமூகத்தில் பரவியுள்ள கருத்துக்களும் நடைமுறைகளும் மொத்தமான பார்வையில் பார்க்கின்ற போது, முஸ்லிம்கள் சமூகமாக, ஒரு தலைமையின் கீழ் கட்டுக்கோப்புடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, பூமியில் கால்பதித்து, எதிர்காலத்தில் ஒரு சக்தியாக மாறும் செயற்பாட்டிற்குத் தடையாக அமைவது போல்தான் தோன்றுகின்றன. எனவே, இந்த செயற்பாடுகளும் சிந்தனைகளும் வெறுமனே இயல்பால் தோன்றுகின்ற இஜ்திஹாதுகளாகவோ செயல்களாகவோ கருத முடியாதிருக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment