பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 19, 2010

முஸ்லிம் பெண்கள் திருமணம் நடந்த பின் தாலி,மெட்டி ??

? முஸ்லிம் பெண்கள் திருமணம் நடந்த பின் மெட்டி அணிகின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

! கைகளிலோ, கால்களிலோ நகைகள் அணிந்து கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. கைகளில் மோதிரம் அணிவது போல் கால் விரல்களில் மெட்டி அணிந்தால் அதைத் தவறு என்று கூற முடியாது. ஆனால் மெட்டி என்ற ஆபரணம் இவ்வாறு அணியப்படுவது இல்லை. தாலி எவ்வாறு திருமணம் ஆன பெண்ணுக்கு அடையாளமாக அணிவிக்கப்படுகிறதோ, அது போன்ற நம்பிக்கையில் தான் மதச்சடங்காக அணிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் திருமணத்திற்கு முன் எந்தப் பெண்ணும் மெட்டி அணிவதில்லை. திருமணச் சடங்காகவும், ஒரு மதத்தின் சடங்காகவும் தான் மெட்டி அணியப்படுகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. இது போன்ற காரியங்களை முஸ்லிம்கள் செய்ய அனுமதி இல்லை.


''யார் இன்னொரு சமுதாயத்திற்கு ஏற்ப நடக்கிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். (அபூதாவூத் 3512)


எனவே தாலியையும், மெட்டியையும் முஸ்லிம்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அணிந்தவர்களும் அதை அகற்ற வேண்டும்.

No comments:

Post a Comment