பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 27, 2010

மையவாடிகளில் அடையாளக் கல் ??

?பொது மையவாடிகளில் அடையாளக் கல் வைத்துக் கொள்ளலாமா?


கப்ருகள் கட்டப்படுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், அது பூசப்படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 2000

கப்ருகளில் அதிகப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளதால் அடையாளக் கல் உள்ளிட்ட எதையும் கப்ரின் மேல் வைப்பது கூடாது.


குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தக் கூடாது.

--> Q/A Ehathuvam Sep 2007

No comments:

Post a Comment