திருமணப் பதிவுச் சட்டத்தை ஏற்கலாமா?
நாம் நமது முறைப்படி செய்து கொள்ளும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதை நாம் எதிர்க்கவில்லை. அதை வரவேற்கிறோம்.
சுமார் ஒரு வருடத்துக்கு முன் இத்தகைய சட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு போட்ட போது அதை அப்போதே நாம் வரவேற்றுள்ளோம். அது குறித்து ஜும்மா உரை நிகழ்த்தியுள்ளோம். இப்போது இச்சட்டத்தை எதிர்ப்பவர்களாக மாறிவிட்டவர்கள் அதைத் தொலைக் காட்சியில் ஒளி பரப்பினார்கள். அந்த உரை இணைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க
நாம் எடுக்கும் எல்லா நிலைபாடுகளையும் எதிர்ப்பது போல் இப்போது இதையும் எதிர்க்கிறார்கள்.
அந்தச் சட்டத்தில் எதைப் பாதகமானது என்று எதிர்ப்பவர்கள் சுட்டிக் காட்டுகிறார்களோ அதில் பாதகம் இருப்பதாகத் தெரியவில்லை.
திருமணம் நடத்தும் தரப்பினர்களின் நடைமுறைச் சட்டங்களின் படியோ, வழக்கம் அல்லது வழக்காறு அல்லது மரபுகளின் படியோ நடக்கவில்லை என்றால்அதில் பதிவாளர் தலையிடவும் மறுக்கவும் போலீஸ் விசாரணை கோரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சாதகமானதைப் பாதகமாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஒரு முஸ்லிம் தனது அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டு பதிவு செய்யச் சென்றால், அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது மனைவியின் சகோதரியை திருமணம் செய்து அதைப் பதிவு செய்ய முயன்றால் அது போன்ற நிலையில் தான் மேற்கண்ட அதிகாரம் பதிவாளருக்கு உள்ளது. பொதுவாக இந்த அதிகாரம் இல்லை.
நடமுறைச் சட்டங்களின் படி நடக்காத போதும், அவரவர் ஏற்றுள்ள வழக்கத்தின் படி நடக்காத போதும் பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தான் இது. இது போல் நடக்கும் போது இது குறித்து காவல் துறை மூலம் விசாரித்து அக்கா மகளைத் தான் திருமணம் செய்துள்ளார் என்று கண்டு பிடிப்பது எந்த வகையில் பாதிக்கக் கூடியது என்று நமக்கு விளங்கவில்லை.
இச்சட்டத்தை எதிர்க்கக் கூடியவர்கள் இதைத் தான் எடுத்துக் காட்டுகிறார்கள்.
அவரவர் சட்டப்படியும் மரபுப்படியும் திருமணம் செய்வோர் இது குறித்து பயப்படும் அவசியம் இல்லை.
அதே நேரத்தில் ஜமாஅத்தின் பதிவை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டால் அதில் நமக்கு மறுப்பு இல்லை.
23.01.2010. 10:21
No comments:
Post a Comment