பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

பெண்கள் பள்ளியில் தொழ அல்லாஹ் அனுமதிக்கவில்லையா??

? இறைவன் தன் திருமறையில் அந்நூர் அத்தியாயத்தில், ''இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்'' என்று கூறுகிறான். பெண்கள் தொழுகிறார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. அப்படி என்றால் பெண்கள் பள்ளியில் தொழ அல்லாஹ் அனுமதிக்கவில்லையா?




(இறை) இல்லங்கள் உயர்த்தப் படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

அல்குர்ஆன் 24:36,37

இந்த வசனத்தில் ஆண்கள் என்று குறிப்பிடப்படுவதால் பெண்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்து ஏராளமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெண்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் கருத்து என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். எனவே இந்த வசனம் நீங்கள் கூறும் அந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை அறியலாம்.

ஆண்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்? என்ற கேள்வி எழலாம். பள்ளிக்கு வரும் அனைவரைப் பற்றியும் இந்த வசனம் பேசவில்லை. வணிகமோ, வர்த்தகமோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுக்காத ஆண்களும் அதில் இருக்கிறார்கள் என்று தான் கூறுகிறது.

பொதுவாக ஆண்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள்; சில சமயங்களில் வியாபாரம் என்பது இறை நினைவை விட்டும் திசை திருப்பி விடும். இந்த நிலை ஏற்படாமல் மறுமையை அஞ்சி தொழுகை, ஸகாத் போன்றவற்றை நிறைவேற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பதையே இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

--> Q/A Ehathuvam Mar 07

No comments:

Post a Comment