பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் ??

? கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா? சுனாமி போன்ற சமயங்களில் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இருவர் மட்டும் எப்படி விசாரணை செய்ய முடியும்?






உங்களில் ஒருவர் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டு விட்டால், கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) ''இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். ''அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். ''உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிமயமாக்கப் படும். பின்னர் அவரை நோக்கி, ''உறங்குவீராக'' என்று கூறப்படும்....

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 991

இந்த ஹதீஸில் ''உங்களில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால்...'' என்று கூறப்படுவதிலிருந்து ஒவ்வொரு நபருக்கும் முன்கர், நகீர் என்ற இரு வானவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்பதை அறிய முடியும். விசாரிக்கும் மலக்குகளின் பெயர் முன்கர், நகீர் என்று தான் விளங்க வேண்டும்.

ஏனெனில் சுனாமி போன்ற நேரங்களில் மட்டுமல்ல! ஒவ்வொரு வினாடியும் உலகில் பல்லாயிரம் பேர் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் இரண்டு பேர் மட்டுமே விசாரிப்பார்கள் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.


--> Q/A Ehathuvam July 2007

No comments:

Post a Comment