பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி ??

? திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி போடுகின்றார்கள். அல்லது கருகமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்?




இந்து மதத்தில் தாலி அணிவதை மதச் சடங்காகக் கருதிச் செய்து வருகின்றனர். எனவே திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க இந்து மதக் கலாச்சாரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே!
(நூல்: அபூதாவூத் 3512)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது.

திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இதுவும் இந்து மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.

திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு

பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி

(பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!)
என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதி 1011
அபூதாவூத் 1819

--Q/A Ehathuvam Magazine Apr 06

No comments:

Post a Comment