பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 19, 2010

அருளைக் கொண்டு வரும் மலக்குகள் ??

? நான் மட்டும் இஸ்லாத்தை ஏற்று, உருவப் படங்கள் உள்ள என் வீட்டில் தொழுது வருகிறேன். உருவப் படங்கள் உள்ள வீடுகளில் இறை அருளைக் கொண்டு வரும் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்ற நபிமொழிப்படி எனக்கு இறைவன் அருள் கிடைக்காதா? நான் வீட்டில் தொழுவது ஏற்கப்படுமா? - எம். ஜெயபால், திருச்சி

! வீட்டில் உள்ள உருவப்படங்களை அப்புறப்படுத்த உங்களுக்குச் சக்தி இருந்து அதை செய்யாவிட்டால் தான் உங்கள் மீது குற்றம் சேரும். அல்லது அந்த வீட்டில் முழு உரிமையாளராக நீங்கள் இருந்து உருவப்படம் இருப்பதில் உடன்பட்டால் அப்போதும் குற்றமாகும். அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு இயலாத நிலையில் மனதால் அதை வெறுத்து விட்டால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
எந்த ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர சிரமம் தரப்படமாட்டாது. அல்குர்ஆன் , 2 : 234


எந்த ஆத்மாவையும் அதன் சக்திக் குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அந்த ஆத்மா செய்த நன்மை அதற்குரியது. அது செய்த தீமையும் அதற்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ அல்லது தவறு செய்து விட்டாலோ எங்களைப் பிடித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எதற்கு எங்களுக்கு வலிமையில்லையோ அதை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களை மன்னித்து எங்கள் பாவங்களை அழித்து விடுவாயாக! நீ தான் எங்கள் பொறுப்பாளன். நிராகரிக்கும் சமுதாயத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக (எனவும் அவர்கள் கூறுவார்கள்). 2 : 286

அதே நேரத்தில் தொழுகை நடத்தும் போது உங்களுக்கு எதிரில் எந்த உருவப்படங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் உருவப்படம் இல்லாத இடத்தை தொழுகைக்காகத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அப்படி ஒரு இடமே இல்லை என்றால் தொழும் போது மட்டும் திரையால் உருவப்படத்தை மறைத்து விட்டு தொழலாம். இப்படிச் செய்து கொண்டால் உங்கள் தொழுகை ஏற்கப்படுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

No comments:

Post a Comment