பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, July 18, 2010

தூங்கும் போது நமது உயிரை ...????

? நாம் தூங்கும் போது நமது உயிரை அல்லாஹ் கைப்பற்றிக் கொள்வதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் கனவில் கெட்ட நிகழ்வுகள் வருவது ஏன்? சில சமயம் தூக்கத்தில் விந்து கூட வெளிப்படுகிறதே அது ஏன்?





! இந்தக் கேள்வியை இன்னும் கூட அழுத்தமாகக் கேட்கலாம். நாம் தூங்கும் போது நமது உயிரை அல்லாஹ் கைப்பற்றிக் கொள்கிறான் என்றால் நாம் எப்படி தூக்கத்தில் மூச்சு விடுகிறோம்?

நமக்கு அரிக்கும் போது எப்படி தூக்கத்தில் சொரிந்து கொள்கிறோம். உடல் ஒரு பக்கம் சூடாகி விடும் போது தூக்கத்தில் எப்படி புரண்டு படுத்துக் கொள்கிறோம்? என்றெல்லாம் கூட கேள்விகளை அடுக்கலாம். மனித உயிர்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் இரு வகைப்படும். ஒன்று பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இருக்கும் உயிர். மற்றொன்று மனிதன் என்பதற்காகச் சிறப்பாக வழங்கப்பட்ட உயிர். மனிதர்களிடம் இரண்டு வகையான உயிர்களும் உள்ளன.

நாம் தூங்கும் போது நமது உயிர்களை இறைவன் கைப்பற்றுகிறான் என்றால் இரண்டாம் வகையான உயிரைக் கைப்பற்றுகிறான் என்பது பொருள். நாம் விழித்திருக்கும் போது சிந்திக்கிறோம், குழம்புகிறோம், தெளிவடைகிறோம். தூங்கும் போது இவற்றில் எதையும் நாம் செய்வதில்லை. மனிதன் என்ற சிறப்புத் தகுதியை நாம் இழந்து விடுகிறோம்.

இந்த வகையில் நமது உயிர்கள் கைப்பற்றப்பட்டு விடுகின்றன. அதே சமயத்தில் மூச்சு விடுதல், அரிக்கும் போது அனிச்சையாகச் சொரிந்து கொள்வது போன்ற காரியங்கள் நம்மிடம் உள்ளன. அதாவது மிருகங்களுக்கு இருக்கும் அளவுக்கு ஒரு உயிர் மிச்சமாக உள்ளது. மனிதனுக்கே உள்ள பிரத்யேகமான சிந்திக்கும் திறன் எடுக்கப்படுவதையே அல்லாஹ் அவ்வாறு கூறுகிறான் என்று புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை. பார்த்தல், கேட்டல் போன்றவை இதில் விலக்குப் பெறுகிறது.

No comments:

Post a Comment