பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

பிற மதத்தவர்கள் உணவளித்தால் நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்??

? பிற மதத்தவர்கள் நமக்கு உணவளித்தால் அவர்களுக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்?உணவளித்தவர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும்.

(பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்குக் கருணை காட்டுவாயாக.
நூல்: முஸ்லிம் 3805

இது அனைவருக்கும் பொதுவான துஆ என்றாலும் முஸ்லிமல்லாத மற்றவர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடுவதற்குத் தடை உள்ளது என்பதால் இந்தப் பிரார்த்தனையை மாற்று மதத்தவர்களுக்குச் செய்ய முடியாது. அவர்களுக்கு பரக்கத் ஏற்படவும், நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம்.

--> Q/A Ehathuvam July 2007

No comments:

Post a Comment