பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 14, 2010

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?



நான் வேலையில்லாமல் இருக்கிறேன். வேலை வாங்கித் தரும் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வேலை வாங்கினால் அது குற்றமா?



அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் அளிக்கப்படும் பொருட்கள் பல வகைகளில் உள்ளன.

பிறர் பொருளை நம்முடையதாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு பொருளை அதிகாரிகளுக்கோ நீதிபதிகளுக்கோ கொடுத்தால் அது கட்டாயம் தடுக்கப்பட்டதாகும். இப்படி கொடுப்பது தான் லஞ்சம் எனப்படும். இவ்வாறு கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் மாபெரும் குற்றமாகும்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

அல்குர்ஆன் (2 : 188)

அது போல் வரிசைப்படியும், முன்னுரிமை அடிப்படையிலும் கிடைக்க வேண்டிய உரிமைகளை முன்னரே பெற்றுக் கொள்வதற்காக கொடுக்கப்படும் தொகையும் லஞ்சம் தான். நமக்கு முன்னால் காத்திருப்பவனைப் பின்னால் தள்ளி விட்டு நாம் முன்னால் அடைந்து கொள்வது முறை கேடாகும். மற்றவனின் உரிமை பறிக்கப்படுவதற்காக கொடுக்கப்படுவதால் இதுவும் லஞ்சம் தான்.

அது போல் தகுதியின் அடிப்டையில் பங்கிடப்படும் உரிமைகளில் குறைந்த தகுதி உள்ளவர் பணத்தைக் கொடுத்து அதிகத் தகுதி உள்ளவரைப் பின்னால் தள்ளி விட்டு அந்த இடத்தை அடைந்தால் அதுவும் குற்றமாகும். நம்மை விட அதிகத் தகுதி உள்ளவன் காத்திருக்கும் போது அவனைப் பின்னால் தள்ளிவிடுவதற்காகக் கொடுக்கப்படும் பணமும் லஞ்சம் தான். இதை வாங்குவதும் கொடுப்பதும் குற்றமாகும்.

மற்றவர்களின் உரிமையைப் பாதிக்காத வகையில் நம்முடைய உரிமையைப் பெறுவதற்காக பல நேரங்களில் பணம் கொடுத்தாக வேண்டியுள்ளது.

மின் இணைப்பு பெற வேண்டும். வீடு கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். அல்லது இது போல் நமக்குச் சேர வேண்டிய உரிமையைப் பெற வேண்டும்.

இது போன்ற காரியங்களைச் செய்து தருவதற்காக பணம் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி கொடுக்கும் பணத்தின் மூலம் நாம் யாருடைய உரிமையையும் பறிப்பதில்லை. நம்முடைய உரிமையைத் தான் அடைந்து கொள்கிறோம்.

பணம் வாங்காமல் இதைச் செய்வதற்காக அதிகாரிகளுக்கு ஊதியம் அளிக்கப்படுவதால் மக்களிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் தான் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் கடமையைச் செய்வதற்காக பணம் வாங்கினால் அது மார்க்கத்தில் குற்றமாகும். கடமையைச் செய்வதற்காக ஒரு முஸ்லிம் லஞ்சம் வாங்க அனுமதி இல்லை.

ஆனால் பணம் கொடுக்காமல் காரியம் ஆகாது என்ற அளவுக்கு கேடு கெட்டவர்கள் ஆட்சி செய்தால் அப்போது நாம் நம்முடைய உரிமையை அடைவதற்காக பணம் கொடுப்பது நிர்பந்தம் என்ற அடிப்படையில் மன்னிக்கப்படும்.

பணம் கொடுக்காவிட்டால் ரேஷன் கார்டு கிடைக்காது என்றா ரேஷன் கார்டு அவசியம் என்பதால் இது நிப்ந்த நிலையாகி விடுகிறது. இல்லாவிட்டால் நம்முடைய அடிப்படைத் தேவைகளை அடைய முடியாமல் போய் விடும்.

கடமையைச் செய்ய லஞ்சம் கேட்பவனைக் கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க இயலும் என்றால் அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு இயலாதவர்கள் குற்றம் பிடிக்கப் பட மாட்டார்கள்.

பார்க்க: திருக்குர்ஆன் 2:173, 6:119, 6:145, 16:115

ஆனால் அரசாங்கத்தில் தொடர்பு இல்லாமல் வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல் ஆட்களுக்கு வேலை கொடுத்தல் போன்றதை ஒருவர் செய்தால் அது ஒரு உழைப்பாகும். அந்த உழைப்புக்கு கூலி பெறுவதும் கொடுப்பதும் குற்றமாகாது.

நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனையில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் எதுவும் இல்லை. எந்த வேலைக்கு எப்படிச் செல்லாம் என்பது உங்களுத் தெரியாது. இவற்றை அறிந்தவர்களை நீங்கள் அனுகும்போது அவர்களுடைய உதவியால் உங்களுக்கு வேலை கிடைக்கின்றது. இதற்காக நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள்.

இவ்வாறு நீங்கள் செய்யும் போது யாருடைய உரிமையையும் நீங்கள் பறிக்கவில்லை. நியாயத்திற்கு எதிராக நீங்கள் பணம்கொடுக்கவுமில்லை. எனவே இது தவறல்ல.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது தனக்கு வழிகாட்டியாக ஒருவரை ஏற்படுத்தி அவருக்கு கூலி கொடுத்தார்கள்.

2263حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامٌ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَاسْتَأْجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ رَجُلًا مِنْ بَنِي الدِّيلِ ثُمَّ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا الْخِرِّيتُ الْمَاهِرُ بِالْهِدَايَةِ قَدْ غَمَسَ يَمِينَ حِلْفٍ فِي آلِ الْعَاصِ بْنِ وَائِلٍ وَهُوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلَاثِ لَيَالٍ فَأَتَاهُمَا بِرَاحِلَتَيْهِمَا صَبِيحَةَ لَيَالٍ ثَلَاثٍ فَارْتَحَلَا وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ وَالدَّلِيلُ الدِّيلِيُّ فَأَخَذَ بِهِمْ أَسْفَلَ مَكَّةَ وَهُوَ طَرِيقُ السَّاحِلِ رواه البخاري

ஆயிஷா (ரலிலி) அவர்கள் கூறினார்கள் :

(மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்றபோது) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலிலி) அவர்களும் பனூ அப்து பின் அதீ, பனூதீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷிக் காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார்.

புகாரி (2263)

No comments:

Post a Comment