பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

குழந்தைகளுக்கு ஏன் தங்க நகை அணியக் கூடாது ??

? ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது? எல்லோருமே எல்லா கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. சிறு சிறு தவறுகளைச் செய்யத் தான் செய்கின்றார். அப்படியிருக்கும் போது ஆண் குழந்தைகளுக்கு தங்க நகை அணிந்தால் என்ன தவறு?





ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதால் அந்தத் தடை ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். குழந்தைகளுக்கு அதன் பெற்றோர் நகை அணிவித்தால் அந்தப் பாவம் அந்தப் பெற்றோரைத் தான் சாரும்.

ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, ''அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கு ஹஜ் இருக்கின்றதா?'' என்று கேட்டாள். நபி (ஸல்) அவர்கள், ''ஆம்! உனக்குக் கூலி உண்டு'' என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2377)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தையை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு அதன் கூலி கிடைக்கின்றதோ அது போன்று தீமை செய்தாலும் அதன் கூலி பெற்றோருக்குக் கிடைக்கும்.

எல்லோரும் சிறு சிறு தவறுகள் செய்கின்றார்கள் என்பதால் நாமும் தவறு செய்யலாம் என்ற வாதம் ஆபத்தானது. ஒரு விஷயம் தடை செய்யப்பட்டுள்ளது என்றால் ஒரு முஃமின் அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

இந்த வசனத்தின் அடிப்படையில் யார் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதற்கான பலனை மறுமையில் அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதைக் காரணம் காட்டி, நாம் செய்யும் பாவங்களை நியாயப்படுத்த முடியாது.

--Q/A Ehathuvam Magazine Apr 06

No comments:

Post a Comment