பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, July 18, 2010

தவணை முறை வியாபாரம் ??

? நான் தவணை முறை வியாபாரம் செய்து வருகிறேன். உதாரணம்: ஒரு குக்கரின் விலை வெளிக்கடைகளில் ரூ. 1200. ஆனால், நான் தவணை முறையில் அதை ரூ. 1900லிற்கு விற்பனை செய்துவிட்டு தினமும் தவணை முறையில் மேற்கொண்ட தொகையை வசூல் செய்து வரு கிறேன். நான் செய்துவரும் இந்த வியாபாரம் மார்க்க அடிப்படையில் கூடுமா? விபரமாக விளக்கவும்.எந்த வியாபாரத்திலும் வட்டி சேர்ந்து விடக்கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவணை முறை வியாபாரம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல என்றாலும் வட்டி சேர்ந்தால் அது தடுக்கப்பட்டதாக ஆகிவிடும். 1200 ரூபாய் பொருளை 1900லிக்கு நீங்கள் விற்கிறீர்கள்.

அதிகப்படியான 700 ரூபாய் அப்பொருளுக்காகவா? அல்லது நீங்கள் கடன் கொடுப்பதற்காகவா? கடன் கொடுத்ததற்காக அதிகப் பணம் வாங்கினால் அதன் பெயர்தான் வட்டி. அப்பொருளுக்காகத் தான் நீங்கள் 1900 வாங்குகிறீர்கள் என்றால் ரொக்கமாக உங்களிடம் அப்பொருளை வாங்குபவருக்கும் அதே விலைக்கு நீங்கள் விற்பனை செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் நீங்கள் கடன் கொடுத்ததற்காக அதிகவிலை வைக்கவில்லை என்பது நிரூபணமாகும். ரொக்கமாக வாங்கினால் 1800 என்றும் கடன் என்றால் 1900 என்றும் நீங்கள் விற்பனை செய்தால் அதிகமாக நூறு ரூபாய் அப்பொருளில் லாபம் என்ற முறையில் நீங்கள் பெறவில்லை. கடன் கொடுத்ததற்கான லாபமாகவே அதைப் பெறுகிறீர்கள் என்று வரும். எனவே ரொக்கத்துக்கும் தவணைக்கும் ஒரே விலை நிர்ணயித்து நீங்கள் விற்பனை செய்தால் அது குற்றமாகாது.

No comments:

Post a Comment