பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

ஒரே நாளில் தானே பெருநாள் கொண்டாடலாமே?

? இரு பெருநாட்களும் பிறையைப் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சவூதி அரேபிய நேரத்திற்கும், இந்திய நேரத்திற்கும் இரண்டரை மணி நேரம் தான் வித்தியாசம். அப்படி இருக்கும் போது இரு நாடுகளிலும் ஒரே நாளில் தானே பெருநாள் கொண்டாடலாமே?




சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியக் கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

சூரியனின் உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கின்றோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். (அந்தந்த நாடுகளின் ஸ்டான்டர்ட் டைம் அடிப்படையில் இதில் சற்று வித்தியாசம் ஏற்படும்.) இது சூரியக் கணக்கு. இந்தக் கணக்கைப் பிறைக்கு அளவு கோலாக எடுக்க முடியாது.

உதாரணமாக, சவூதியில் 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சவூதியில் பிறை பார்த்த அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9 மணி.

தலைப்பிறையை இரவு ஒன்பது மணிக்குப் பார்க்க முடியாது. சவூதியில் பார்க்கப்பட்ட பிறையை நாம் நமது நாட்டில் பார்க்க வேண்டுமானால் மறு நாள் மாலை 6.30 மணி வாக்கில் தான் பார்க்க முடியும். அதாவது சவூதியில் 1ம் தேதி மாலை தெரிந்த பிறை, நமது நாட்டில் 2ம் தேதி மாலையில் தான் தென்படும்.

சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக நாம் சூரிய உதயத்தை அடைகிறோம். அதே சமயத்தில் பிறை தென்படும் நேரத்தை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் தாமதமாக அடைகின்றோம். இதனால் தான் சவூதிக்கும் நமக்கும் வித்தியாசம் ஏற்படுகின்றது.

மேலும் சவூதி அரேபியா இந்தியாவுக்கு மேற்குப் பகுதியில் உள்ளது. எனவே கிழக்கே உதிக்கும் சூரியனை நாம் சவூதியை விட முன்னதாகவே அடைந்து விடுகிறோம். சந்திர உதயம் (பிறை தோன்றுதல்) மேற்குப் பகுதியிலிருந்து துவங்குகின்றது. எனவே சந்திர உதயத்தை நாம் சவூதியை விட கிட்டத்தட்ட ஒரு நாள் தாமதமாக அடைகின்றோம். எனவே தான் சவூதிக்கும் நமக்கும் நோன்பு மற்றும் பெருநாளில் வித்தியாசம் ஏற்படுகின்றது.

--Q/A Ehathuvam May 06

No comments:

Post a Comment