பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?




தொழுகை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் வரை ஓத வேண்டுமா? ஸலவாத்தும் துஆவும் ஓத வேண்டுமா?



நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு ஸலவாத்தும் ஸலாமும் கூற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

திருக்குர் ஆன் 33:56

இந்தக் கட்டளையை ஒவ்வொரு தொழுகையிலும் கூட நாம் நிறைவேற்ற வேண்டும்.

حدثنا يعقوب حدثنا أبي عن ابن إسحاق قال وحدثني في الصلاة على رسول الله صلى الله عليه وسلم إذا المرء المسلم صلى عليه في صلاته محمد بن إبراهيم بن الحارث التيمي عن محمد بن عبد الله بن زيد بن عبد ربه الأنصاري أخي بلحارث بن الخزرج عن أبي مسعود عقبة بن عمرو قال أقبل رجل حتى جلس بين يدي رسول الله صلى الله عليه وسلم ونحن عنده فقال يا رسول الله أما السلام عليك فقد عرفناه فكيف نصلي عليك إذا نحن صلينا في صلاتنا صلى الله عليك قال فصمت رسول الله صلى الله عليه وسلم حتى أحببنا أن الرجل لم يسأله فقال إذا أنتم صليتم علي فقولوا اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم وبارك على محمد النبي الأمي كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் தொழும் போது தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது என்று ஒரு மனிதர் கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் அன்ன்பிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ அலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதுன் மஜீத் என்று கூறுங்கள் எனக் கூறினார்கள்.

முஸ்னத் அஹ்மத் 16455

அத்தஹிய்யாத் எனும் சொற்றொடரில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு எனக் கூறி ஸலாம் கூறும் கட்டளையை நாம் நிறைவேற்றுகிறோம். அத்துடன் மேற்கண்ட ஸலவாத்தையும் கூறினால் தான் ஸலாம் ஸலவாத் இரண்டையும் கூறியவர்களாக முடியும்.

எனவே முதல் இருப்பில் அத்தஹிய்யாதுடன் ஸலவாத்தையும் ஓத் வேண்டும் என்பதே மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் சரியாகத் தெரிகின்றது.

ஆனால் அதன் பின்னர் ஓதும் துஆக்களை கடைசி இருப்பில் ஓதினால் போதும்.

و حدثني زهير بن حرب حدثنا الوليد بن مسلم حدثني الأوزاعي حدثنا حسان بن عطية حدثني محمد بن أبي عائشة أنه سمع أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم إذا فرغ أحدكم من التشهد الآخر فليتعوذ بالله من أربع من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر المسيح الدجال و حدثنيه الحكم بن موسى حدثنا هقل بن زياد قال ح و حدثنا علي بن خشرم أخبرنا عيسى يعني ابن يونس جميعا عن الأوزاعي بهذا الإسناد وقال إذا فرغ أحدكم من التشهد ولم يذكر الآخر

உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹுதை முடித்த பின் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்பு தேடட்டும். 1-நரக் வேதனை, 2-கப்ரின் வேதனை, 3-வாழும் போதும் மரனிக்கும் போதும் ஏற்படும் வேதனை, 4- தஜ்ஜாலின் சோதனை என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்

No comments:

Post a Comment