? நோன்பு திறந்த பின் ஓதப்படும் தஹபள்ளமவு... என்ற துஆ ஆதாரப்பூர்வமானதா? அல்லது அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க... என்று துவங்கும் துஆவை ஓதலாமா?
நோன்பு திறந்த பின் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மர்வான் பின் ஸாலிம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிரஹ்மதிக்கல்லதீ வஸிஅத் குல்ல ஷையின் அன் தக்ஃபிரலீ'' என்ற துஆவை இப்னு உமர் (ரலி) அவர்கள் செய்ததாக இப்னுமாஜாவில் 743வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லை. இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவே இடம் பெற்றுள்ளது.
நபித்தோழர்களின் கூற்று மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்பட முடியாது.
நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆக்கள் என்று ஹதீஸ்களில் இடம் பெறும் அனைத்தும் பலவீனமான செய்திகளாக இருப்பதால் இதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.
--> Q/A Ehathuvam July 2007
Pj மறு ஆய்விற்கு மறுப்பு -நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ
ReplyDeleteநோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ ஓர் ஆய்வு பகுதி:2
நோன்பு திறந்த பிறகு ஓதும் தஹபள்ளமஉ வப்தல்லதில் உரூகு வ ஸபதல் அஜ்ரு..... என்ற துஆவை மத்ஹப் மறுப்பாளர்கள் பல வருடங்களாக ஓதி வந்தனர்.இது குறித்து மறுஆய்வு என்ற பெயரில் கட்டுரை எழுதி அந்த துஆவை பலகீனம் என்பதாக காரணத்தை கூறியுள்ளனர்.இது குறித்து நாம் மீண்டும் ஆய்வு செய்து பார்த்தபோது இந்த துஆ பலமானது, ஏற்கத்தக்கது தான் என்பது மீண்டும் உறுதியானது.(இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் கூட அமல்களின் சிறப்புகளில் பலவீனமான ஹதீஸை அமல்செய்யலாம் என்பதுதான் நமது நிலைப்பாடும்,ஹதீஸ்களை வல்லுனர்களின் நிலைப்பாடுமாகும்) அதுமட்டுமின்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூட இந்த துஆ ஏற்கத்தக்கது என்பதாகதான் கூறியுள்ளனர்.
Pj இந்த துஆவை ஏன் ஏற்றார்? பிறகு ஏன் மறுத்தார்? எனும் காரணத்தை அறிய மறுஆய்வு கட்டுரையை முதலில் பார்ப்போம்.👇👇👇
https://difaeaslaf.blogspot.com/2020/05/pj.html?m=1