பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 15, 2010

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் , PJ அவர்களுக்கு , இன்றைய உலகில் கொசுவை அழிக்க tennis bat போன்ற பொருளை பயன்படுத்துகின்றோம் , இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது , நெருப்பால் உயிர்களுக்கு தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதை பயன்படுதக்க்கூடாது என்று சிலர் கூறுகின்றனர் , சரியா ? விளக்கவும்



நெருப்பால் மனிதர்களைத் தான் எரிக்கக் கூடாது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கு அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை.

மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 3019

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்று வஹீ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.

புஹாரி 3319

எறும்பை எரித்ததை அல்லாஹ் கண்டிக்கவில்லை. எல்லா எறும்புகளையும் ஏன் எரிக்க வெண்டும் என்று தான் கண்டிக்கிறான். நெருப்பில் எரிக்காமல் வேறு வகையில் அழித்திருக்கலாமே என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம்.

No comments:

Post a Comment