பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர் ??

? பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

நான் நபி (ஸல்) அவர்களிடம், கஅபாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி, ''இது கஅபாவில் சேர்ந்ததா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்'' என்றார்கள். ''எதற்காக அவர்கள் இதைக் கஅபாவோடு இணைக்கவில்லை?'' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், ''உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்'' என்று பதிலளித்தார்கள். ''கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவில் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1584

பள்ளிவாசல்களிலேயே மிக அந்தஸ்து வாய்ந்த, முதல் ஆலயமான கஅபத்துல்லாஹ்வை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் மக்காவிலிருந்த முஸ்லிமல்லாதவர்கள் தான் புனர் நிர்மாணம் செய்துள்ளார்கள்.

கட்டுமானத்தில் அந்த மக்கள் செய்த தவறுகளைச் சரி செய்திருப்பேன் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர அவர்கள் கஅபாவைக் கட்டியதே தவறு என்று கூறவில்லை.

எனவே பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து நிதி பெறுவது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

--Q/A Ehathuvam Magazine Mar 06

No comments:

Post a Comment