பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

சிறுவன் இமாமாக நின்று தொழுகை நடத்த??

? புளியங்குடியிலுள்ள தவ்ஹீது பள்ளிவாசலில் இஷா தொழுகைக்காக சென்றிருந்தோம். அங்கு 9 வயதுச் சிறுவன் இமாமாக நின்று தொழுகை நடத்த, அவனுக்குப் பின்னால் பெரியவர்கள் 15 பேர் நின்று தொழுதோம். அந்தச் சிறுவன் மைக்கை மாட்டிக் கொண்டு பெரிய சூராக்களைப் பயமின்றி 10 நிமிடம் ஓதி நிதானமாகத் தொழுகையை முடித்தான். இதை சுன்னத் வல் ஜமாஅத்தினர் தவறு என்றும், சிறுநீர் கழித்து கழுவத் தெரியாத வயதில் இமாமாக நிற்பது குற்றம் என்று கூறுகின்றார்கள். இது சரியா? விளக்கவும்.


இமாமாக நின்று தொழுவிப்பதற்கு நன்றாகக் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு ஏதுமில்லை. பின்னால் நின்று தொழுபவர்களை விட சிறு வயதில் இருப்பவர் குர்ஆனை நன்றாக ஓதுபவராக இருந்தால் அவர் தாராளமாக இமாமத் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சிறு வயதையுடையவர்கள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளது.

எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபார கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாக குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிருத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.

என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தா செய்யும் போது அது என்னை விட்டு விலகி ( எனது பித்தட்டு தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண் உங்கள் இமாமின் பித்தட்டை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா? என்று கேட்டார். உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்த சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல் : புகாரி 4302

--Q/A Ehathuvam Magazine Apr 06

No comments:

Post a Comment